புகார் பெட்டி..
குப்பைகளை எரிப்பதால் பாதிப்பு விழுப்புரம் கம்பன் நகர் சாலையோரத்தில் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் அப்பகுதி மக்களுக்கு சுவாச பாதிப்பு ஏற்படுகிறது. - கவுதமி, விழுப்புரம். மணல் புழுதியால் அவதி வளவனுார் - புதுச்சேரி சாலையில் மணல் புழுதியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். - கண்ணபிரான், வளவனுார். எரியாத தெருவிளக்கு விழுப்புரம், தேவநாதசுவாமி நகரில் தெருவிளக்கு சரியாக எரியாததால் இரவில் வெளியே செல்ல அப்பகுதி மக்கள் அச்சப்படும் சூழல் உள்ளது. - சூரியா, விழுப்புரம். விபத்து அபாயம் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில், மாடுகள் அவ்வப்போது அணிவகுத்து செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. - சண்முகம், விழுப்புரம்.