புகார் பெட்டி
குண்டும், குழியுமான சாலை விழுப்புரம், ஆசிரியர் நகரில் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். - ஆசாத், விழுப்புரம். தாறுமாறாக நிற்கும் வாகனங்கள் வளவனுார் பஜார் வீதிக்கு செல்லும் சாலையில் தாறுமாறாக இருசக்கர வாகனங்களை, 'பார்க்கிங்' செய்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கிறது. - சிவக்குமார், வளவனுார். விதிமுறை மீறும் வாகன ஓட்டிகள் விழுப்புரம் நான்குமுனை சிக்னலை மதிக்காமல் விதிமுறைகளை மீறி வாகன ஓட்டிகள் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. - சந்துரு, விழுப்புரம்.