உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / லாரிகளில் கடத்த முயன்ற 10,000 கிலோ குட்கா பறிமுதல்

லாரிகளில் கடத்த முயன்ற 10,000 கிலோ குட்கா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம் தடா பகுதியில் இருந்து, சென்னைக்கு லாரிகள் வாயிலாக குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., கிரியாசக்தி மேற்பார்வையிலான போலீசார், நேற்று பெத்திக்குப்பம் சந்திப்பில் வாகன தணிக்கை ஈடுபட்டனர்.அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற இரு லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். இரு லாரிகளிலும், 10,000 கிலோ குட்கா பண்டல்கள், தார்ப்பாய் போட்டு மறைத்து எடுத்து சென்றது தெரியவந்தது.லாரிகளுடன், குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், லாரி ஓட்டுனர்களான, சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தினகரன், 48, வாலாஜாபாதைச் சேர்ந்த நரேஷ், 27, ஆகியோரை கைது செய்தனர்.விசாரணையில், ஆந்திர மாநிலம் தடாவில் இருந்து சென்னைக்கு ரெகுலராக குட்கா பண்டல்களை லாரிகளில் எடுத்து சென்றது தெரியவந்து. லாரி உரிமையாளர்கள் மற்றும் குட்கா கடத்தலில் தொடர்புடைய நபர்களை தனிப்படை அமைத்து, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை