உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்

விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்

6 கிலோ தங்கம் பறிமுதல்ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து, நேற்று முன்தினம் இரவு பயணியர் விமானம், சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், ஐந்து பேரின் நடவடிக்கை மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதுதொடர்பாக, அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்களது உடைமைகளை பரிசோதித்தனர். இதில், ஐந்து பேரின் உள்ளாடைக்குள் இருந்து, ஆறு பெரிய தங்க செயின்கள், 10 பாக்கெட்களில் தங்க பசை மற்றும் 7 தங்க கட்டிகள் என, 6.168 கிலோ தங்கம் சிக்கியது.இதன் இந்திய மதிப்பு 3.91 கோடி ரூபாய். விசாரணையில் ஐந்து பேரும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், சுற்றுலாவுக்காக துபாய் சென்றுவிட்டு, அங்கு சிலர் உதவியோடு தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. ஐந்து பேரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை