மேலும் செய்திகள்
மாணவனிடம் போதை வஸ்து பறிமுதல்
14-Feb-2025
வளசரவாக்கம், வளசரவாக்கம், ஆற்காடு சாலையில், கடந்த 23ம் தேதி இரவு, மதுபோதையில் இருந்த வாலிபர், உடன் இருந்த பெண்ணை தாக்கியதை கண்ட பகுதிவாசிகள், வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த வாலிபரை மடக்கி விசாரித்தனர். அப்போது, ஏட்டு சுனில் என்பவரை, அந்த வாலிபர் அவதுாறாக பேசி தாக்கினார்.மறுநாள் போதை தெளிந்த பின், அவரை காவல் நிலையம் வரவழைத்து போலீசார் விசாரித்தனர். இதில், வளசரவாக்கம், முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோகுல்ராஜன், 23, என்பதும், கருத்து வேறுபாடு காரணமாக காதலியை தாக்கியதும் தெரிந்தது. போலீஸ்காரரை தாக்கிய வழக்கில், கோகுல்ராஜன் மீது வழக்கு பதிந்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.
14-Feb-2025