உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  ஒப்பந்ததாரர்களை மிரட்டி வசூலிக்கும் த.வெ.க., நிர்வாகி!

 ஒப்பந்ததாரர்களை மிரட்டி வசூலிக்கும் த.வெ.க., நிர்வாகி!

“அதிகாரி கணிப்பு தப்பா போயிட்டு வே...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. “எந்த ஊருல பா...” என கேட்டார் அன்வர்பாய். “மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பா நடந்து முடிஞ்சிட்டுல்லா... மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியுடன், அரசின் 10 துறைகள் ஒருங்கிணைந்து பல மாசங்களா இதுக்கான வேலைகள் நடந்துச்சு வே... “புதுசா வந்த மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குமார், 'கும்பாபிஷேகத்துக்கு 50 லட்சம் பக்தர்கள் வருவாங்க'ன்னு கணிச்சிருக்காரு... ஆனா, அங்க பல வருஷம் வேலை பார்க்கிற அதிகாரிகள், 'அதிகபட்சம் 2 லட்சம் முதல் 3 லட்சம் பக்தர்கள் தான் வருவாங்க சார்'னு, சொல்லியிருக்காவ வே... “அதை ஏத்துக்காத கமிஷனர், '50 லட்சம் பக்தர்கள் வருகைக்கு ஏற்பாடு செய்யணும்'னு நகராட்சி நிர்வாக துறை இயக்குனருக்கு கடிதமே அனுப்பிட்டாரு... நகராட்சி நிர்வாக துறை இயக்குனர் மதுசூதன ரெட்டியும், நாலு மாநகராட்சிகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட நகராட்சிகளி ன் அதிகாரிகள், ஊழியர்கள்னு எல்லாரையும் மதுரைக்கு அனுப்பிட்டாரு வே... “ஆனா, கும்பாபிஷேகத்துக்கு 1.50 லட்சம் பக்தர்கள் தான் வந்திருக்காவ... உதாரணத்துக்கு, பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, 74 இடங்கள்ல, 'பார்க்கிங்' வசதி செஞ்சிருந்தாவ... ஆனா, அதுல கால்வாசி இடம் கூட வாகனங்களால நிரம்பல வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி. “கலெக்டர் மாறிட்டதால, உத்தரவை கிடப்புல போட்டுட்டா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... “பெரம்பலுார் மாவட்டம், தேனுார்ல இருக்கற அரசு மேல்நிலை பள்ளியில் ஒரு ஆசிரியரும், ஆசிரியையும் திருமணத்தை மீறிய உறவுல இருக்கா... பள்ளியிலயே கொஞ்சலும், குலாவலுமா இருக்கறதா ஏற்கனவே நாம பேசியிருக்கோம் ஓய்... “இது சம்பந்தமா, ஏற்கனவே கலெக்டரா இருந்த சரண்யா ஹரிக்கு புகார்கள் போனது... 'ரெண்டு பேரையும் வேற வேற ஊர்களுக்கு, மாத்திடுங்கோ'ன்னு கல்வி துறை அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டாங்க ஓய்... “ஆனா, அடுத்த சில நாட்கள்ல கலெக்டரை மாத்திட்டதால, அவங்க போட்ட உத்தரவை கல்வி துறை அதிகாரிகள் கிடப்புல போட்டுட்டா... இதனால, அந்த ஜோடி உற்சாகமா இருக்கு ஓய்...” என்றார் குப்பண்ணா. ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி, “ராஜா கிளம்பிட்டீங்களா... சித்ராவை கேட்டதா சொல்லுங்க...” என பேசி முடித்தபடியே, “ஒப்பந்ததாரர்களிடம் மிரட்டல் வசூல் நடத்துறாருங்க...” என்றார். “யாருப்பா அது...” என கேட்டார் அன்வர்பாய். “நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை வடக்கு ஒன்றிய த.வெ.க.,வில் ஒரு நிர்வாகி இருக்காரு... இவர், அந்த பகுதியில அரசு பணிகளை எடுத்து செய்ற ஒப்பந்ததாரர்களை மிரட்டி, 'கட்டிங்' வசூலிக்கிறாருங்க... “எந்த அரசு பதவியிலும் இல்லாத இவர், தனக்குன்னு ஒரு அலுவலகத்தையும் திறந்து வச்சிருக்காரு... 'பொதுமக்கள், என்னை தேடி வந்து குறைகளை சொல்லலாம்'னு அழைப்பு விடுக்கிறதும் இல்லாம, உள்ளூர் பிரச்னைகள்ல கட்டப்பஞ்சாயத்தும் செய்றாருங்க... “இதனால, 'இவரது செயல்பாடுகள் கட்சி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையா இருக்கு'ன்னு, தலைமைக்கு கட்சி நிர்வாகிகள் சிலர் புகார் அனுப்பியிருக்காங்க... உளவுத்துறை போலீசாரும், இவரை பத்தி மேலிடத்துக்கு புகார் அனுப்பியிருக்காங்க...” என முடித்தார் அந்தோணிசாமி. “கிளம்பலாமா அசோக்...” என்ற படியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் எழுந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
செப் 20, 2026 20:56

ஒப்பந்ததாரர்களை மிரட்டி வசூலிக்கும் த.வெ.க., நிர்வாகிகள் பற்றிய செய்திகள் அடிக்கடி வருகின்றன. தவெக முதல்வர் உண்மையிலேயே தூய ஆட்சி கொடுக்க விழைகிறாரா..? அப்படியிருக்கையில் அவர் ஆணையை மீறி கட்சியிலிருக்கும் இரண்டும் கெட்டான் தலைகள் கூட களமிறங்கி வசூல் வேட்டை நடத்துவதெப்படி..? எது உண்மை..? மக்கள் குழப்பிபப்போயுள்ளனர்.


Anantharaman Srinivasan
செப் 20, 2026 19:15

கலெக்டர் மாறி விட்டால் அவர் போட்ட பழைய உத்தரவு மதிப்பிழந்து போய்விடுமா..? ஆசிரியர் ராஜாக்கும் ஆசிரியை ராணிக்கும் சுக்ர தசை நடக்கிறது. இவர்கள் கூத்தடிக்கும் விஷயம் பேப்பரில் வந்து நாற்றமெடுத்த பின்னும் இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கண்டு கொள்ளவில்லையா..?


Lakshminarasimhan
செப் 20, 2026 08:08

இவர் தான் ஆளும் கட்சியின் கலெக்ஷன் ஏஜென்ட் என்பதை புரிஞ்சுக்காம உளவு துறை ரிப்போர்ட் அனுப்பியது வெறும் கண்துடைப்பு நாடகமே எல்லாம் கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன் தான் வேறொன்றும் இல்லை


மேலும் செய்திகள்