உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சாலை துண்டிப்பு சீரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு

சாலை துண்டிப்பு சீரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலத்தில் ஒன்பது வார்டுகள் உள்ளன. இங்கு குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.இச்சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருவதால், பணி முடிந்த தெருக்களில் சாலையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.இதற்காக, 12 கோடி ரூபாயை குடிநீர் வாரியம், மாநகராட்சிக்கு செலுத்தியது.இதில், 192, 197, 200 ஆகிய வார்டுகளில், 20க்கும் மேற்பட்ட தெருக்களில் சாலை சீரமைக்கப்பட உள்ளது. பருவமழைக்கு முன், அனைத்து சாலைகளையும் சீரமைக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !