உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / விநாயகருக்கு தங்க கிரீடம் வழங்கிய ஆனந்த் அம்பானி

விநாயகருக்கு தங்க கிரீடம் வழங்கிய ஆனந்த் அம்பானி

மும்பை, நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதை முன்னிட்டு, மும்பை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியின் போது, மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா விநாயகர் கோவிலில், மக்கள் கூட்டம் அலைமோதும். ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, லால்பாக்சா ராஜா விநாயகருக்கு, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 கிலோ தங்க கிரீடத்தை, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி வழங்கி உள்ளார்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம், லால்பாக்சா ராஜா விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். அப்போது, ஆனந்த் அம்பானி வழங்கிய தங்க கிரீடம் விநாயகருக்கு அணிவிக்கப்பட்டிருந்தது.சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஆனந்த் அம்பானி, லால்பாக்சா ராஜா விநாயகரின் தீவிர பக்தர். 15 ஆண்டுகளாக, விநாயகர் சதுர்த்தியின் போது, குடும்பத்தோடு வந்து லால்பாக்சா ராஜா விநாயகரை, அவர் தரிசனம் செய்து வருகிறார். இதற்கிடையே, லாக்பாக்சா ராஜா விநாயகர் கோவிலின் கவுரவ உறுப்பினர் பதவி, ஆனந்த் அம்பானிக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை