உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஆவடியில் ஜனவரி - ஜூலை 1,174 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆவடியில் ஜனவரி - ஜூலை 1,174 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆவடி, ஆவடி கமிஷனரகத்தில், இந்தாண்டு இதுவரையிலும் 1,174 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில், போதைப்பொருள் கடத்தலை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1103 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரையில் மட்டும் 271 கஞ்சா வழக்குகளில், 437 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 1,174 கிலோ கஞ்சா, 14.5 கிலோ கஞ்சா சாக்லேட் மற்றும் 9598 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புகையிலை பொருட்கள் தொடர்பான வழக்குகளில், 361 வழக்குகளில் 419 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 17,180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரயிலில் கஞ்சா ஒடிசா மாநிலம் புரியில் இருந்து விரைவு ரயில், நேற்று மாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், 9வது நடைமேடைக்கு வந்து நின்றது. அதன், 'எஸ்3' பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையில், நான்கு கிலோ கஞ்சா இருப்பது ரயில்வே போலீசாரின் சோதனையில் தெரியவந்தது. அவற் றின் மதிப்பு 2 லட்சம் ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ