உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

காஞ்சிபுரம்,:ஏனாத்துாரில் கஞ்சா விற்றதாக, நான்கு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள சுடுகாடு அருகே, சிலர் கஞ்சா விற்பதாக, காஞ்சி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு கஞ்சா விற்ற, ஏனாத்துார் பிரகாஷ், 20, திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் சதீஷ், 23, யுவராஜ், 27, வீர ராகுல், 22. ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 3.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி