உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / 100 நாள் பணியாளர் 40 பேர் குளவி கொட்டி காயம்

100 நாள் பணியாளர் 40 பேர் குளவி கொட்டி காயம்

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை குளவி கொட்டியதில் 40 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலப்பெருங்கரை கிராமத்தில் நேற்று மதியம் முதியவர்கள் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்து குளவி கூட்டை கலைத்த போது 40 பேரை கொட்டியது. இதில் 24 பேருக்கு காயம் ஏற்பட்டு பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி