உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அ.தி.மு.க. , - த.வெ.க., கூட்டணியை தடுக்க உத்தரவு!

அ.தி.மு.க. , - த.வெ.க., கூட்டணியை தடுக்க உத்தரவு!

இ ஞ்சி டீயை ருசித்தபடியே, ''சீக்கிரமே மாவட்டச் செயலர் பதவி தரப் போறாங்க...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி. ''எந்த கட்சியில, யாருக்கு வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''சட்டசபை தொகுதி வாரியா நிர்வாகிகளை சென்னைக்கு அழைச்சு, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துறாரே... திருச்சி மாவட்டம், முசிறி தொகுதி நிர்வாகிகளுடன் சமீபத்துல ஆலோசனை நடத்தினாருங்க... ''அப்ப, முசிறி எம்.எல்.ஏ.,வும், திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலருமான காடுவெட்டி தியாகராஜன் மீது, நிர்வாகிகள் ஏகப்பட்ட புகார்களை அடுக்கினாங்க... குறிப்பா, 'இளைஞரணி பதவிகளுக்கு பணம் வாங்கிட்டார்'னு சொல்லியிருக்காங்க... ''அதோட, 'கட்சி நிர்வாகிகளை அனுசரிச்சு போறது இல்ல'ன்னும் சொல்லியிருக்காங்க... இதனால, அவரது மாவட் டச் செயலர் பதவியை பறிச்சு, மூத்த அமைச்சர் நேருவின் மக னும், பெரம்பலுார் எம்.பி., யுமான அருணிடம் வழங்க ஸ்டாலின் முடிவு பண்ணிட்டாருங்க... ''அதே நேரம், தன் ஆதரவாளரான தியாகராஜன் பதவியை, தன் மகனுக்கு கொடுத்தா சரிவருமான்னு நேரு யோசிக்கிறாராம்... ஆனாலும், 'சீக்கிரமே மாவட்டச் செயலர் மாற்றம் இருக்கும்'னு திருச்சி தி.மு.க.,வினர் சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''ஏகப்பட்ட செலவு பண்ணியும், பேர் கிடைக்கல ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, சமீபத்துல திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டசபை தொகுதிகள்ல பிரசாரம் செஞ்சார்... இதுக்கான ஏற்பாடுகளை மாநகர் மாவட்ட ஜெ., பேரவை செயலரான லோகநாதன் தலைமையில, பகுதி செயலர்கள் செஞ்சிருந்தா ஓய்... ''ஆனா, கூட்டம் முடிஞ்சு பழனிசாமி நன்றி சொல்றப்ப, அவரது வண்டியில் இருந்தவா பேப்பரை மாத்தி குடுத்துட்டாளாம்... அதனால, சம்பந்தமே இல்லாத அடுத்த தொகுதி எம்.எல்.ஏ., பெயரையும், மாநில நிர்வாகி ஒருத்தர் பெயரையும் சொல்லி, பழனிசாமி நன்றி சொல்லிட்டு போயிட்டார் ஓய்... ''இதனால, 'கூட்டம் சேர்க்க தலைக்கு, 500 ரூபாய், வாகனங்கள் வாடகை, பிளக்ஸ் பேனர்கள்னு, 1 கோடி வரை செலவு பண்ணியும், பழனிசாமி கூட சொகுசா வலம் வந்தவா பேரை தட்டிண்டு போயிட்டாளே'ன்னு உள்ளூர் நிர்வாகிகள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''அமைச்சர்கள் பீதியில இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''எதுக்கு வே...'' என கேட்டார், அண்ணாச்சி. ''கரூர் சம்பவத்துக்கு முன் னாடி, 'அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி இல்ல'ன்னு தான் த.வெ.க.,வினர் பேசிட்டு இருந்தாங்க... இதனால, 'தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள், அ.தி.மு.க., விஜய் கட்சின்னு பிரிஞ்சு, நாம சுலபமா ஜெயிச்சிடலாம்'னு அமைச்சர்கள் பலரும் உற்சாகமா இருந்தாங்க பா... ''ஆனா, கரூர் சம்பவத்துல த.வெ.க.,வுக்கு ஆளுங்கட்சி கடும் நெருக்கடி தருது... த.வெ.க.,வுக்கு அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ஆதரவு தர்றாங்க... இதனால, அந்த அணியில் த.வெ.க., சேர்ந்துட்டா, தி.மு.க.,வின் வெற்றி கேள்விக்குறியாகிடும்னு உளவுத்துறை வட்டா ரங்கள்ல இருந்து தகவ ல் வந்திருக்குது பா... '' இதை கேள்விப்பட்டு, வெற்றி மயக்கத்துல இருந்த அமைச்சர் கள் திகில்ல இருக்காங்க... தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் வகுத்து தர்ற டீம்கிட்ட, 'அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி உருவாகாம தடுக்கும் வேலைகளை பாருங்க'ன்னு உத்தரவு போட்டிருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய். அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
அக் 08, 2025 18:38

மிகப்பெரிய இடத்தில் ஒட்டிக்கொண்டு, ஆரம்பிக்கும்போதே அதிரடி செய்ய விஜய் இப்படி கிளம்பு, கரூரிக்காரர் செய்த குழப்படியும், உயிரிழப்புகளுமே மறைமுகத் காரணம் என்று மக்கள் மனதில் நிலைத்துவிட்டதும் தான் காரணம். சொந்தக்காசில் வைத்துக்கொண்ட சூனியம்


Natchimuthu Chithiraisamy
அக் 08, 2025 10:39

சீக்கிரமே விஜய் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்


sankaranarayanan
அக் 08, 2025 10:34

இனி பிஹார் அந்தணர் பிரசாந்த் கிஷோர் வந்து உதவவே மாட்டார் அவரை நம்பி ஒரு பயனும் இல்லை வேறு யாரைய்யா அடுத்து கட்சியிலிருந்து கொண்டுவரலாம் என்றே நினைக்கிறார்களாம் ஆளும் திராவிட மாடல் கட்சி மேலிடம்


duruvasar
அக் 08, 2025 08:29

குருமாவின் குறும்புகள் போதாது என அமைச்சர்கள் நினைக்கிறார்களோ ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை