உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  கைத்தறி நெசவாளர் சங்கத்திற்கு விருது

 கைத்தறி நெசவாளர் சங்கத்திற்கு விருது

பரமக்குடி: பரமக்குடி ராஜீவ்காந்தி கைத்தறி நெசவாளர் சங்கத்திற்கு மாவட்ட அளவிலான சிறந்த நெசவாளர் சங்கத்திற்கான விருது வழங்கப்பட்டது. கூட்டுறவு வார விழா ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் பல்வேறு துறைகளுக்கு விருதுகளை மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வழங்கினார். அப்போது மாவட்ட அளவில் சிறந்த நெசவாளர் சங்கமாக பரமக்குடி ராஜீவ்காந்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து பரமக்குடி கைத்தறி உதவி இயக்குனர் சேரன், விருது பெற்ற சங்க மேலாளர் ராஜேந்திரன் மற்றும் சங்க நெசவாளர்களை பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !