உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  சிறந்த டாக்டர் விருது 

 சிறந்த டாக்டர் விருது 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர் மதிவாணனுக்கு சிறந்த டாக்டருக்கான விருது வழங்கப்பட்டது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நுாறுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணிபுரிகின்றனர். இதில் சிறந்து விளங்கும் டாக்டருக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கவுரவிக்கப்படும். அந்த வகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்களுக்குள் அறுவை சிகிச்சை செய்து சிறந்து விளங்கிய எலும்பு முறிவு டாக்டர் வ.து.ந.மதிவாணனுக்கு சிறந்த டாக்டருக்கான விருது வழங்கப்பட்டது. மருத்துவக் கல்லுாரி டீன் அமுதாராணி விருது, சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை