உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

கோவிலம்பாக்கம், மேடவாக்கம் அடுத்த கோவிலம்பாக்கம், ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கமலக்கண்ணன், 14, கோவிலம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று பள்ளிக்கு சென்று வீடு வந்த கமலக்கண்ணன், மாலை 5:00 மணியளவில் தன் இரு நண்பர்களுடன், சுண்ணாம்பு கொளத்துார் ஏரியில் இறங்கி குளித்த போது, ஆழமான பகுதிக்கு சென்று, நீரில் மூழ்கி மாயமானார்.இதையடுத்து நண்பர்கள் பயத்தில் அலறினர். அவ்வழியாக வந்தவர்கள், சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி தீயணைப்பு வீரர்கள், ஏரியில் இறங்கி, சிறுவன் கமலக்கண்ணனை சடலமாக மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ