உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஓ.டி.,யில் ஓபி அடிக்கும் பஸ் தொழிலாளர்கள்!

ஓ.டி.,யில் ஓபி அடிக்கும் பஸ் தொழிலாளர்கள்!

''மாவட்டச் செயலர்பதவிக்கு முட்டி மோதிண்டுஇருக்கா ஓய்...'' என்றபடி, பெஞ்சில் அமர்ந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...''சேலம் மாவட்டத்துலஇருக்கற, 11 சட்டசபை தொகுதிகள்ல, ஒண்ணுலதான் தி.மு.க., ஜெயிச்சது... வர்ற 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்,அமைப்பு ரீதியா கட்சியைபலப்படுத்த தலைமை முடிவு பண்ணியிருக்கு ஓய்...''இப்ப, சேலம் கிழக்கு,மேற்கு, மத்தின்னு மூணுமாவட்டங்களா இருக்கு...இதை, அஞ்சா பிரிக்க முடிவு பண்ணியிருக்கா...இதன்படி, சேலம் தெற்கு,வடக்கு, மேற்கு ஆகிய மூணு சட்டசபை தொகுதிகளை ஒரு மாவட்டமா கவும், சங்ககிரி, இடைப்பாடி ஒரு மாவட்டம், மேட்டூர், ஓமலுார் ஒரு மாவட்டம், வீரபாண்டி, ஏற்காடு ஒரு மாவட்டம், ஆத்துார், கெங்கவல்லியை ஒரு மாவட்டமா பிரிக்க போறா ஓய்...''இதுல, வீரபாண்டி, ஏற்காடு தொகுதி அடங்கிய மாவட்டச் செயலர் பதவியை பிடிக்க,வீரபாண்டி தொகுதியில் நாலு பிரமுகர்கள் முட்டி மோதுறா... பதவிக்கு வந்துட்டா, 2026 சட்டசபை தேர்தல்ல ஈசியா 'சீட்' வாங்கிடலாம்னும் கணக்கு போட்டு காய் நகர்த்தறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''ஆட்களே இல்லாம அவதிப்படுறாங்க பா...''என, அடுத்த தகவலுக்குமாறினார் அன்வர்பாய்.''எந்த துறையிலங்க...''எனக் கேட்டார், அந்தோணிசாமி.''பெரம்பலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை, ஜெ., ஆட்சியிலயே மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்குஇணையா தரம் உயர்த்திட்டாங்க... இதன்படி, டாக்டர்கள், நர்ஸ்கள் கூடுதலா நியமிக்கப்பட்டாங்க பா...''ஆனா, ரத்த பரிசோதனை, எக்ஸ்-ரே, மருந்தகம் போன்ற பிரிவுகளுக்கு பழைய எண்ணிக்கையிலான ஊழியர்கள்தான் இதுவரை இருக்காங்க... ஊழியர்கள் எண்ணிக்கையை உயர்த்தும்படி, சம்பந்தப்பட்ட பிரிவு களின் பொறுப்பாளர்கள் அரசுக்கும், அதிகாரி களுக்கும் கடிதம் எழுதியும், நடவடிக்கை இல்ல பா...''இதனால, இருக்கிறஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுது... நோயாளிகளுக்கும் உடனுக்குடன் பரிசோதனை முடிவுகள் கிடைக்க மாட்டேங்குது பா...'' என்றார், அன்வர்பாய்.''என்கிட்டயும் இதே மாதிரி தகவல் ஒண்ணு இருக்கு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டலத்துல, 12 டிப்போக்கள் இருக்கு... இதுல இருந்து, 727 பஸ்களை இயக்குதாவ வே...''பல்வேறு கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள்லமண்டல, மாவட்ட, கிளைச் செயலர்கள், தலைவர்கள்னு பலரும்,ஓ.டி., எனப்படும், 'ஆன் டூட்டி' எடுத்துக்கிட்டு, தொழிற்சங்க பணிகள்,சொந்த வேலைகள்னு போயிடுதாவ... இன்னும்சிலர், பஸ் ஸ்டாண்ட் பணி, செக்கிங் பணின்னுஓ.டி.,யில கிளம்பிடுதாவவே...''மண்டல அலுவலகம்மற்றும் டிப்போக்கள்லதலா, 10 பேருக்கு மேலஇப்படி ஓ.டி.,யில ஓடிடுதாவ... இதனால, பணியில இருக்கிற டிரைவர்களை 16 மணி நேரம், 20 மணி நேரம் வரை பஸ்களை ஓட்ட வைக்கிறது, லீவ் தராம அலைக்கழிக்கிறதுன்னு அதிகாரிகள் பாடா படுத்துதாவ வே...''அதுலயும், ஈரோடுலபெரிய அளவுல கட்சி நிகழ்ச்சி, அமைச்சர்கள்வருகை, அவ்வளவு ஏன்,கோவைக்கு முதல்வர்வந்தால்கூட, ஓ.டி.,ன்னுபலரும் அங்க பறந்துடுதாவ... இதனால, வேலையில இருக்கிறவங்களுக்கு கூடுதல் பளுவாகி, மன உளைச்சல்ல அவதிப்படுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, அனைவரும் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Oru Indiyan
டிச 06, 2024 18:52

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, அவர்களின் போக்குவரத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் ராயப்பேட்டை அலுவலகத்தில் எப்போதும் இருப்பார்கள். சம்பளம் மட்டும் அரசு கொடுக்கும். மோசமான ஊழியர்கள்.


D.Ambujavalli
டிச 06, 2024 05:46

உடல் அலுங்காமல் சம்பளம் வாங்கவும், side business செய்து பணம் பார்க்கவும் வசதியாக சங்க நிர்வாகி, உறுப்பினர்கள் என்று இஷ்டத்துக்கு ஆட்டம்போடத்ட்தான் இந்த சங்கங்கள் உள்ளன


Kundalakesi
டிச 06, 2024 00:20

அனைவரையும் தூக்க வேண்டும். அரசு இடத்தில சங்கத்திற்கு என்ன வேலை. செய்யும் வேலைக்கு தகுந்த போனஸ் தான் வழங்க வேண்டும்