உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் திக்... திக் பயணம்

நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் திக்... திக் பயணம்

கடம்பத்துார், திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி பேருந்து என, தினமும் 1 லட்சத்திற்கும் மேலான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள், பகல் நேரங்களில் நெடுஞ்சாலையில் சுற்றித்திரிவதால், வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.சில நேரங்களில் நெடுஞ்சாலையில், கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இது தொடர்பாக, கலெக்டர் மற்றும் எஸ்.பி., உத்தரவிட்டும் நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகள் குறித்து அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காதது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை