தண்ணீர் வாளியில் தவறி விழுந்த குழந்தை பலி
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுார் அடுத்த என்.என்.ஆர்.கண்டிகை இருளர் காலனியை சேர்ந்தவர் முத்து. இவரது இரண்டு வயது பெண் குழந்தை நித்யா. நேற்று காலை தாயுடன் இருந்த நித்யா, மாம்பழம் சாப்பிட்டுள்ளார். கையை சுத்தம் செய்ய தண்ணீர் வாளி அருகே சென்ற குழந்தை, தவறி வாளியில் விழுந்துள்ளது. மூச்சு திணறி மயங்கிய குழந்தையை, வங்கனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.