உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பக்தர்கள் பாதம் காக்க தேங்காய் நார் கம்பளம்

பக்தர்கள் பாதம் காக்க தேங்காய் நார் கம்பளம்

திருவாலங்காடு, திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவிலுக்குள் வரும் பக்தர்கள், கடும் வெப்பம் காரணமாக, காலை கீழே வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.குறிப்பாக, முதியோர், குழந்தைகள் உள்ளிட்டோர் சிரமப்படுகின்றனர். எனவே கோவில் உள்ளே வர பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம் சார்பில் தேங்காய் நார் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி