பழைய வடிகால்வாய்களை இடித்து புதுப்பிக்க முடிவு
சைதாப்பேட்டை, அடையாறு மண்டலம், 169வது வார்டு, மேற்கு சி.ஐ.டி., நகர், காந்தி தெரு, பாரதிதாசன் கிழக்கு தெரு, ரயில்வே பார்டர் தெரு உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால்வாய்கள் கட்டி, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன.தற்போதைய நீரோட்டத்திற்கு ஏற்ப வடிகால்வாய் இல்லாததுடன், மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால், 5.5 கி.மீ., துாரம் கொண்ட வடிகால்வாய்களை இடித்துவிட்டு, புதிதாக கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இதற்காக, 7.21 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. அடுத்த பருவமழைக்கு முன், வடிகால்வாய்களை கட்டி முடிக்கும் வகையில், நடவடிக்கை எடுத்து வருவதாக, அதிகாரிகள் கூறினர்.