உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / தி.மு.க., பூத் நிர்வாகிகளுக்கு கவனிப்பு ஆரம்பம்!

தி.மு.க., பூத் நிர்வாகிகளுக்கு கவனிப்பு ஆரம்பம்!

''எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணிட்டு, விளம்பரத்துல கோட்டை விட்டுட்டாங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்துல இருந்து பிரசார பயணத்தை துவங்கியிருக்காரே... அவரது பிரசார மேடை, ரோடு ஷோ நடத்துற இடம், யார் யாருடன் உரையாடணும்னு எல்லா விஷயங்களையும், முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில அ.தி.மு.க.,வினர் பார்த்து பார்த்து செஞ்சிருந்தாங்க...''ஆனா, பழனிசாமி பயணிக்கிற பாதை முழுக்க, தி.மு.க.,வினர் பெருசு பெருசா, சுவர் விளம்பரங்களை வரைஞ்சு வச்சிருந்தாங்க... அதுல, ஆட்சியின் சாதனைகளை குறிப்பிட்டிருந்தாங்க...''பழனிசாமி பயணித்த பாதையில எங்கயும், அ.தி.மு.க., விளம்பரங்களையே பார்க்க முடியலைங்க... 'இதை வேலுமணி டீம் கவனிக்கலையா'ன்னு, அ.தி.மு.க.,வினரே சலிச்சுக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''சொத்து குவிச்சவா பட்டியலை எடுத்துண்டு இருக்கா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.''எந்த கட்சியில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''ஆளுங்கட்சியில தான்... உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க.,வைச் சேர்ந்த கவுன்சிலர்கள், பேரூராட்சி, ஒன்றிய மற்றும் நகராட்சித் தலைவர்கள் பலர், நாலு வருஷமா நிறைய முறைகேடுகள்ல ஈடுபட்டு, சொத்துக்களை சேர்த்திருக்கா ஓய்...''இது சம்பந்தமா, 'பொதுமக்களுடன் நேரடி தொடர்புல இருக்கற இவாளால தான், நிறைய இடங்கள்ல ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயர்'னு மேலிடத்துக்கு உளவுத்துறை அறிக்கை குடுத்திருக்கு... இதனால, யார் யார் எவ்வளவு சொத்து சேர்த்திருக்கா... கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துற விதமா செயல்பட்டவா யார்னு கணக்கெடுத்து, அவா மேல நடவடிக்கை எடுக்க மேலிடம் திட்டமிட்டிருக்கு...''அவாளது சொத்து பட்டியலை, தமிழகம் முழுக்க உளவுத்துறையினர் ரகசியமா சேகரிச்சுண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''இப்பவே, 'கவனிப்பை'ஆரம்பிச்சுட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''வாக்காளர்களுக்கா வே...'' என கேட்டார், அண்ணாச்சி.''அதை, தேர்தல் நெருங்கும்போது பண்ணுவாங்க... தேர்தல் வேலையில இறங்கிட்ட தி.மு.க.,வினர், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயர்ல வீடு வீடா பிரசாரம் பண்றாங்களே... இதுக்காக, 'பூத்' வாரியா நிர்வாகிகளை நியமிச்சிருக்காங்க பா...''ஒவ்வொரு, 'பூத்' கமிட்டி நிர்வாகிகளுக்கும் தலா, 5,000 ரூபாயை முதல் கட்டமா வழங்கியிருக்காங்க... சில பகுதிகள்ல இதை விட கூடுதலான தொகையும் குடுத்திருக்காங்க பா...''இது போக, சமூக வலைதளங்கள்ல பண்ற பிரசார பணிகளுக்காக,கட்சியின் ஐ.டி., அணி நிர்வாகிகளுக்கு, போன்லயே பெரிய சைஸ்ல இருக்குமே... 'டேப்லெட், அதுவும், காஸ்ட்லியான மொபைல் போன்களையும் வாங்கி குடுத்திருக்காங்க... இந்த செலவுகளை எல்லாம், 'பசை'யான துறைகளை கவனிக்கிற சில அமைச்சர்கள் தான் செஞ்சிருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.''அது சரி... சின்ன மீனை போட்டு தானே பெரிய மீனை பிடிக்க முடியும் வே...'' என, சிரித்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூலை 12, 2025 17:06

வாக்காளர்கள் என்று வரும்போது மகளிர் மனம் குளிர புடவை, மூக்குத்தி, கொலுசு என்ற அளவில் இருக்கும் ஆண்களுக்கு, கேட்கவே வேண்டாம், குவார்ட்டர் அள்ளிவிட்டால் மடங்கிவிட மாட்டார்களா?


Anantharaman Srinivasan
ஜூலை 12, 2025 01:13

தி.மு.க. நிர்வாகிகளுக்கே கவனிப்பு அமோகம்னா வாக்காளர்களும் கவனிப்பு மூணு நாலு மடங்கு இருக்கலாம்.


முக்கிய வீடியோ