''துணிச்சலா மூணு பேர் கலந்துக்கிட்டாங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி. ''என்ன விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில், கிறிஸ்துவ இயக்கம் சார்பில், கிறிஸ்துமஸ் விழா நடத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்குனாங்க... இதுல, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில நிர்வாகி, ஆதவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினரா பங்கேற்று பேசினாரு... ''விழாவுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தாங்க... ஆனா, தி.மு.க., தலைமைக்கு பயந்து யாரும் கலந்துக்கல... ''ஆனா, த.வெ.க., கூட்டணியை ஆதரிக்கிற காங்கிரஸ் மூத்த நிர்வாகி திருச்சி வேலுசாமி, தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் ரமேஷ்குமார், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்., தலைவர் பியூனுலால்சிங் ஆகிய மூணு பேரும், ஆதவ் அர்ஜுனா கூட ஒரே மேடையில, விழாவுல கலந்துக்கிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''மறுபடியும் பழைய கதையை ஆரம்பிச் சிட்டாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''தமிழகத்தில், பிளஸ் 1 வகுப்புகளுக்கு பொது தேர்வை ரத்து பண்ணி, போன அக்டோபர் மாசம் அரசு உத்தரவு போட்டுச்சுல்லா... பெரும்பாலும், தனியார் பள்ளிகள், பிளஸ் 2 தேர்வுல, 100 சதவீதம் தேர்ச்சி காட்டுறதுக்காக, பிளஸ் 1 பாடங்களையே கத்து குடுக்காம, நேரடியா பிளஸ் 2 பாடங்களை நடத்திடுறதா குற்றச்சாட்டு இருந்துச்சு வே... ''இதனால் தான், பிளஸ் 1க்கும் பொதுத்தேர்வு நடைமுறையை கொண்டு வந்தாவ... இதனால, வேற வழியில்லாம தனியார் பள்ளிகளும், பிளஸ் 1 பாடங்களை முழுசா நடத்திட்டு இருந்தாவ வே... ''ஆனா இப்ப, பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து பண்ணிட்டதால, தனியார் பள்ளிகள்ல, வழக்கம் போல, நேரடியா பிளஸ் 2 பாடங்களை கத்து குடுக்க துவங்கிட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''விராலிமலை தொகுதிக்கு கடும் போட்டி நடக்கறது ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''எந்த கட்சியில பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா, சுகாதார துறையின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இருக்கார்... '2011ல் இருந்து தொடர்ந்து ஜெயிக்கறதால, வர்ற தேர்தல்லயும் இங்கயே விஜயபாஸ்கர் போட்டியிடுவார்'னு அவரது கட்சியினர் சொல்றா ஓய்... ''இவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில், ரெண்டு முறை போட்டியிட்டு தோற்று போன பழனியப்பன், இப்ப அன்னவாசல் ஒன்றிய செயலரா இருக்கார்... மூணாவது முறையா, இங்க போட்டியிட விரும்பறார் ஓய்... ''இதுக்காக, வர்ற பொங்கல் பண்டிகைக்கு தொகுதி மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க முடிவு பண்ணியிருக்காராம்... அதே நேரம், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட, தி.மு.க., செயலர் செல்லபாண்டியனும் இந்த தொகுதிக்கு குறி வச்சிருக்கார் ஓய்... ''தொகுதியில் இருக்கற நிர்வாகிகளை கூப்பிட்டு, 'விஜயபாஸ்கர் எவ்வளவு செலவு பண்ணி னாலும், அதை விட கூடுதலா நாமும் பண்ணிடலாம்... அதனால, கட்சி பணிகளை சுறுசுறுப்பா செய்ங்கோ'ன்னு சொல்லியிருக்கார்... ''இதனால, 'விராலிமலை தொகுதியை பிடிக்கப் போறது மாவட்ட செயலரா அல்லது ஒன்றிய செயலரா'ன்னு தி.மு.க.,வுக்குள்ள பட்டிமன்றமே நடக்கறது ஓய்...'' என, முடித் தார் குப்பண்ணா. அரட்டை முடிய, அனைவரும் கலைந்தனர்.