மேலும் செய்திகள்
மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு
29-May-2025
அரசு பேருந்து மோதி செங்கையில் பெண் பலி
23-May-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி 27வது வார்டு, குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா, 60. இவர், நேற்று முன்தினம் மாலை சாலையில் நடந்து சென்ற போது, அங்கு திரிந்த மாடு முட்டியதில் படுகாயமடைந்தார்.அங்கிருந்தோர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், செங்கல்பட்டில் மாடுகள் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, செங்கல்பட்டு நகர அ.தி.மு.க., செயலர் செந்தில் குமார், செங்கல்பட்டு நகராட்சி கமிஷனரிடம், நேற்று மனு அளித்தார்.மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
29-May-2025
23-May-2025