மேலும் செய்திகள்
கரைபுரளுது லஞ்ச 'ஆறு' கடிவாளம் போடுறது யாரு?
21-Oct-2025
''உ ங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு ஜி.எஸ்.டி., வரி கட்டியிருக்கா ஓய்...'' என்றபடியே, பெஞ்சி ல் அமர்ந்தார் குப்பண்ணா. ''ஆச்சரியமா இருக்கே... விளக்கமா சொல்லுங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாம்களை ஊர்தோறும் நடத்தி, மக்களிடம் மனுக்கள் வாங்கறாளோல்லியோ... நகர்ப்புறங்களில், 13 அரசு துறைகள், ஊரக பகுதியில், 15 அரசு துறைகளின் அதிகாரிகள், ஊழியர்கள் இதுல கலந்துக்கறா ஓய்... ''நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த முகாமிற்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியுடன், 3.70 லட்சம் ரூபாய் செலவு பண்ணியிருக்கறதா, அதிகாரிகள் கணக்கு காட்டியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''அமலாக்கத்துறை மேல சந்தேகப்படுறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு, துாத்துக்குடி மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடக்கு... லஞ்ச ஒழிப்பு துறையினர் பதிவு செய்த இந்த வழக்கின் அடிப்படையில் , 2022ல் அனிதா மற்றும் அவரது குடும்பத்துக்கு சொந்தமான, 6.50 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கினாங்க... ''அதோட, சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில தங்களையும் சேர்த்துக்க கேட்டு, அமலாக்கத்துறை தாக்கல் செஞ்ச மனு தள்ளுபடியாகிடுச்சு... இதை எதிர்த்து, ஐகோர்ட் கிளையில் அமலாக்கத்துறை, 'அப்பீல்' செய்யலைங்க... ''இதுக்கு இடையில, சொத்துக்கள் முடக்கம் விசாரணையை சட்டுபுட்டுன்னு முடிச்ச அமலாக்கத்துறை, மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத் தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் பண்ணிடுச்சு... ஆனா, 'அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் பண்றதுக்கு, கவர்னரிடம் ஒப்புதல் வாங்கணும்' என்ற நடைமுறையை அமலாக்கத்துறை கடைப்பிடிக்கல... இதனால, 'அனிதா வழக்குல அமலாக்கத்துறை அடக்கி வாசிக்குதோ'ன்னு அ.தி.மு.க.,வினர் சந்தேகப்படுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''ஊழியர்களை ஒருமையில பேசி மிரட்டுறாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய். ''யாரு வே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''துாத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறையில், ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... ஊழியர்கள் எல்லாரையும் ஒருமையில் பேசி, அடாவடியா விரட்டுறாங்க பா... ''எல்லாரையும் மரியாதையா நடத்தும்படி, சமீபத்தில் ஊழியர்கள் போராட்டம் நடத்தியும், அவங்க திருந்தல... சமீபத்துல, அவங்க கார்ல போயிட்டு இருந்தப்ப, 'ரெட் சிக்னல்' விழவே, டிரைவர் காரை நிறுத்தியிருக்காரு பா... ''உடனே, 'சிக்னல் விழுந்தா என்ன...? பேசாம போக வேண்டியது தானே... என்கிட்ட கேட்காம ஏன் காரை நிறுத்தினே'ன்னு கடுமையா திட்டியதும் இல்லாம, காரை ஓரங்கட்டி நிறுத்திட்டு, டிரைவரை விரட்டி விட்டுட்டாங்க பா... ''மறுநாளே, அந்த டிரைவரை வேற ஊருக்கு துாக்கி அடிச்சுட்டாங்க... இவங்க, 'டார்ச்சரால' ஒரு ஊழியருக்கு மாரடைப்பு வந்து, 'பைபாஸ் ஆப்பரேஷன்' பண்ணியிருக்காரு... இவங்களை பத்தி கலெக்டரிடம் ஊழியர்கள் புகார் குடுத்தும், எந்த நடவடிக்கை யும் இல்ல பா...'' என முடித்தார், அன்வர்பாய். தன் மொபைல் போனை பார்த்த அண்ணாச்சி, ''என் பேத்தி யாழினி கூப்பிட்டிருக்கா...'' என முணுமுணுத்தபடி, அந்த நம்பருக்கு கால் செய்ய, பெரியவர்கள் கிளம்பி னர்.
21-Oct-2025