உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சாலையில் பெண்ணிடம் அத்துமீறல்: இன்ஜி., கைது

சாலையில் பெண்ணிடம் அத்துமீறல்: இன்ஜி., கைது

துரைப்பாக்கம்,சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இன்ஜினியர் கைது செய்யப்பட்டார். பெருங்குடியில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், 23 வயது பெண் பணியாற்றி வருகிறார். கடந்த 14ம் தேதி பணி முடித்து, பெருங்குடி, குமரன் நகர் பிரதான சாலையில் நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர், அந்த பெண் தனியாக செல்வதைப் பார்த்து, தகாத முறையில் நடந்துள்ளார். அப்பெண் சத்தம் போடவே, அங்கிருந்து தப்பினார். இது குறித்து துரைப்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில், விழுப்புரம் மாவட்டம், கஞ்சனுாரைச் சேர்ந்த சக்திவேல், 30, என்பதும் கட்டட பொறியாளரான இவர், பெருங்குடியில் விடுதி ஒன்றில் தங்கி பணிபுரிவதும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தும்போது தப்பியோட முயன்றார். அப்போது, கீழே விழுந்ததில் சக்திவேலின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின், அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை