உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / 4 வயது மகளை துாக்கிட்டு தந்தையும் தற்கொலை 

4 வயது மகளை துாக்கிட்டு தந்தையும் தற்கொலை 

தஞ்சாவூர்:தஞ்சாவூர், புதுப்பட்டினம் கோரிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன், 42, பொக்லைன் வாகன ஆப்பரேட்டர். இவரது மனைவி சுகன்யா, 29. இவர்கள் இருவருக்கும், 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களின் மகள் நவ்யாஸ்ரீ, 4. இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன் பிறந்த ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.இந்நிலையில், சுகன்யா, நேற்று காலை ஆண் குழந்தையை, மருத்துவ பரிசோதனைக்காக, தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்று விட்டார். அப்போது, வீட்டில் முருகேசன் மற்றும் மகள் நவ்யாஸ்ரீ மட்டும் தனியாக இருந்தனர்.பிறகு, குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை முடித்து, நேற்று மதியம் வீட்டுக்கு சுகன்யா திரும்பி சென்றபோது, வீட்டில் உள்ளே, முருகேசன் மற்றும் நவ்யா ஸ்ரீ இருவரும் தனித்தனியாக, சேலையில் துாக்கில் தொங்கிய நிலையில், இறந்து இருந்ததைக் கண்டு சுகன்யா அலறினார்.இதுகுறித்து சுகன்யா புகாரின்படி, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இரண்டு மாதங்களாக முருகேசன் வேலைக்கு செல்லவில்லை. இதனால் முருகேசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இருவரும் பேசாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த முருகேசன், தன் மகளை துாக்கில் தொங்கவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை