உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கஞ்சா கடத்தல் ஐந்து பேர் கைது

கஞ்சா கடத்தல் ஐந்து பேர் கைது

புளியந்தோப்பு, திருவண்ணாமலையை சேர்ந்தவர் சிவகுமார், 24; சென்னை பெசன்ட் நகரில் காவலாளியாக வேலை செய்து வந்தார். சரியான வருமானம் இல்லாததால், கஞ்சா விற்று சம்பாதிக்க ஆசைப்பட்டார்.திருவண்ணாமலையில் வசிக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த வெங்கடேஷ பெருமாளிடம் இருந்து கஞ்சா வாங்கி, பலருக்கும் கொடுத்து, பணம் சம்பாதித்துள்ளார்.நேற்று முன்தினம், பெரம்பூர் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்ற சிவகுமாரை போலீசார் கைது செய்தனர். இவருடன் சேர்ந்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட, வில்லிவாக்கத்தை சேர்ந்த ராம் பிரசன்னா, 21, பெரம்பூரைச் சேர்ந்த வசந்த், 21, அப்ரோஸ், 21, புளியந்தோப்பை சேர்ந்த முகமது இலியாஸ், 25 என, மொத்தம் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை