உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / போலீசார் மீது தாக்குதல் ஒரு பெண் உட்பட ஐவர் கைது

போலீசார் மீது தாக்குதல் ஒரு பெண் உட்பட ஐவர் கைது

கிரீன் பார்க்: போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதை தட்டிக்கேட்ட போலீசாரை தாக்கியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த 23ம் தேதி இரவு 7:30 மணி அளவில் கிரீன் பார்க் பகுதியில் சாலையின் நடுவே ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகவலறிந்து அங்கு வந்த போலீசார், இடையூறு ஏற்படுத்திய காரில் இருந்தவர்களை எச்சரித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காரில் இருந்த கும்பல், போலீசாரை தாக்கினர். இதில் போலீசாரின் சீருடை கிழிந்தது.இதுதொடர்பாக சப்தர்ஜங் என்க்ளேவ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஒரு பெண் உட்பட ஐந்து பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ