ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, “விஜய்கட்சி மாநாட்டுக்கு போனவங்களை, 'கவனிக்க' முடிவு பண்ணியிருக்காங்க பா...”என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.“எந்த ஊருலங்க...” எனகேட்டார், அந்தோணிசாமி.“விக்கிரவாண்டியில,ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, தமிழக வெற்றிக்கழக மாநாட்டை விஜய் நடத்தினாரே... இதுக்கு, ஈரோடு மாவட்டத்தில்இருந்து தி.மு.க., மாணவரணி, இளைஞரணியை சேர்ந்த பலரும் ஆர்வக் கோளாறுல போயிருக்காங்க பா...“எத்தனை வாகனங்கள்ல, எவ்வளவு பேர் போனாங்க, அது யார், யார்னு கண்டுபிடிச்சு பட்டியல் தயாரிக்கும்படி,சம்பந்தப்பட்ட வார்டு மற்றும் பகுதி செயலர்களுக்கு மாவட்டச் செயலர்கள் உத்தரவு போட்டிருந்தாங்க... இப்ப, பட்டியல் தயாராகிடுச்சு பா...“அவங்களை எல்லாம்கட்சியில இருந்து துாக்கபோறாங்கன்னு பார்த்தா,வர்ற பொங்கலுக்கு பணம்,பரிசுன்னு குடுத்து கட்சியிலயே தக்க வைக்கும்படி மாவட்ட அமைச்சர்முத்துசாமி தரப்புல இருந்துஉத்தரவு வந்திருக்குது பா...” என்றார், அன்வர்பாய்.“லஞ்ச புகார்ல சிக்கியஏட்டுக்கு நுாதன தண்டனைதந்திருக்காருங்க...” என்றஅந்தோணிசாமியே தொடர்ந்தார்...“துாத்துக்குடி வடபாகம் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு ஏட்டு இருக்காரு... முதல்வர் தனிப்பிரிவு, எஸ்.பி.,க்குநேரடியா வரும் புகார்கள்குறித்து விசாரணை நடத்தி,அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறது தான் இவரது வேலைங்க...“இப்படி விசாரணை நடத்த போறப்ப லஞ்சம்வாங்கியதா, ஏட்டு மீதுஆதாரங்களுடன் ஏ.எஸ்.பி.,மதனுக்கு சிலர் புகார் குடுத்தாங்க... திடீர்னு ஒருநாள் வடபாகம் ஸ்டேஷனுக்கு போன ஏ.எஸ்.பி., 'ரோல் கால்' நடத்தினாருங்க...“அப்ப, எல்லா போலீசார்முன்னிலையிலும், 'லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்... இனி லஞ்சம் வாங்க மாட்டேன்'னு 10 முறை சொல்லுமாறுஏட்டுக்கு உத்தரவு போட்டாரு... அவரும்வெலவெலத்தபடி அப்படியே சொல்ல, 'இனி உங்க மேல லஞ்சபுகார் வந்தா, சஸ்பெண்ட்தான்'னு எச்சரிக்கை பண்ணிட்டு போயிட்டாருங்க... 'இது, அவருக்கு மட்டுமல்ல... மற்ற போலீசாருக்கும் சேர்த்து தான்'னு சொல்றாங்க...” என்றார்,அந்தோணிசாமி.“வழக்குல சாதகமானதீர்ப்பு வரணும்னு சிறப்புபூஜைகள் செய்யசொல்லியிருக்காரு வே...”என, கடைசி தகவலுக்குகட்டியம் கூறினார், பெரியசாமி அண்ணாச்சி.“யார் ஓய் அது...” எனகேட்டார், குப்பண்ணா.“பெஞ்சல் புயல் காரணமா, திருவண்ணாமலையில் கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டுச்சுல்லா... இதுல, ஏழு பேர் இறந்தும் போயிட்டாங்கல்லா வே...“அவங்க குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்நிவாரணமா குடுத்திருக்காரு... தன் அணியைச்சேர்ந்த நிர்வாகிகளிடமும்,மழையால் பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு நிவாரணஉதவிகள் வழங்கும்படி உத்தரவு போட்டிருக்காருவே...“இதுக்கு நடுவுல, 'இரட்டை இலை சின்னம்தொடர்பா, தேர்தல் கமிஷன் மற்றும் சென்னைஐகோர்ட்ல இருக்கிறவழக்குல நமக்கு சாதகமான தீர்ப்பு வரணும்னு,அண்ணாமலையார் கோவில்ல சிறப்பு பூஜைகள் நடத்துங்க'ன்னும், தன் அணியினருக்கு உத்தரவு போட்டிருக்காருவே...” என முடித்தார், அண்ணாச்சி.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.