உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அடிதடியில் முடிந்த விபத்து தகராறு இருதரப்பைச் சேர்ந்த 4 பேர் கைது 

அடிதடியில் முடிந்த விபத்து தகராறு இருதரப்பைச் சேர்ந்த 4 பேர் கைது 

புளியந்தோப்பு, வாகனங்கள் மோதிக் கொண்ட விவகாரத்தில், இருதரப்பில் ஏற்பட்ட மோதலில் பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய இருவர் உட்பட, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராம்குமார், 34; ஆட்டோ ஓட்டுநர். நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற தினேஷ் என்பவர், ஆட்டோவின் மீது இடித்துவிட்டு சென்றுள்ளார். இதனால், ராம்குமார் மற்றும் அவரது மனைவி மாலதி உள்ளிட்டோர், தினேஷின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். ராம்குமாருக்கு ஆதரவாக வந்த அவரது உறவினரான சவுந்தர்யா, 28 என்ற நபரை, எதிர் தரப்பினர் அடித்து அவரது ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரு தரப்பிலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருதரப்பிலும் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து சவுந்தர்யாவை தாக்கிய வழக்கில், புளியந்தோப்பு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சூர்யா, 19 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வயலட் மேரி, 40 ஆகியோரை கைது செய்தனர். அதேபோன்று வயலட் மேரியை தாக்கிய வழக்கில் ராம்குமார், 34 மற்றும் அவரது மனைவி மாலதி, 31 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும், போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை