தேனியில் ஜி.ஆர்.டி., ஜூவல்லர்ஸ் திறப்பு
தேனி:தேனி மதுரை ரோட்டில் ஜி.ஆர்.டி., ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் 65 வது ஷோரூம் திறக்கப்பட்டது. ஷோரூமில் தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம், ரத்தினங்கள் பதிக்கப்பட்ட நகைகளை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கினர். திறப்பு விழாவை முன்னிட்டு இங்கு தங்க நகைகள் கிராமிற்கு ரூ.250 தள்ளுபடி, பழைய தங்கம் எக்சேஞ்சில் கிராமிற்கு கூடுதலாக ரூ.75, வைரத்தின் மதிப்பில் காரட்டுக்கு ரூ.12,500 வரை சேமிப்பு என பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பிளாட்டினம் நகைகளில் கிராமிற்கு ரூ.500 தள்ளுபடி, வெள்ளி பொருட்கள், கொலுசுகளுக்கு 25 சதவீதம் வரை செய்கூலி குறைவு, வெள்ளி நகைகளுக்கு எம்.ஆர்.பி.,யில் 10 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூவல்லரி நிர்வாக இயக்குநர் ஜி.ஆர். 'ஆனந்த்' ஆனந்த பத்மநாபன் கூறுகையில், 'வாடிக்கையாளர்களுக்காக 'கோல்டன் லெவன் ப்ளெக்ஸி' எனும் மாதாந்திர நகை சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அனைவரும் நகைகளை எளிதாகவும், அணுக கூடிய விலையில் சொந்தமாக்கி கொள்ளும் முயற்சியாகும். வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,' என்றார்.மற்றொரு நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'ஒவ்வொரு புதிய ஷோரூமிலும் திறமையான கைவினை நுணுக்கம் கொண்ட சேவை வழங்க வேண்டும் என்ற உறுதி மொழியை பின்பற்றுகின்றோம். நேர்த்தியான நகை கலெக்ஷன்களை அனுபவிக்க வாடிக்கையாளர்களை வரவேற்கிறோம்,' என்றார்.