உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / வாய்க்காலை ஆக்கிரமித்து மருத்துவமனை பார்க்கிங்!

வாய்க்காலை ஆக்கிரமித்து மருத்துவமனை பார்க்கிங்!

டபராவில் வந்த பில்டர் காபியை வாங்கியபடியே, “எல்லை தாண்டி போக பயப்படறார் ஓய்...” என, பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.“யாரை சொல்றீங்க பா...” என கேட்டார், அன்வர்பாய்.“காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சரா அன்பரசன் இருந்தார்... இவரும், இதே மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான்... ஆனா, எந்த அரசு நிகழ்ச்சியா இருந்தாலும்,மாவட்ட தலைநகரான காஞ்சிபுரத்துல நடத்தாம,தன் தொகுதியான ஆலந்துார்லயே நடத்தினார் ஓய்...“இதனால, அவருக்குபதிலா மாவட்ட பொறுப்புஅமைச்சரா, கைத்தறி துறை அமைச்சர் காந்தியை நியமிச்சாங்க...இவரும், காஞ்சிபுரத்துக்குவந்து சில அரசு நிகழ்ச்சிகள்ல கலந்துண்டார் ஓய்...“ஆனா, ஸ்ரீபெரும்புதுார், ஆலந்துார் சட்டசபை தொகுதிகள் பக்கம், மறந்தும் கூட காந்தி போக மாட்டேங்கறார்... ஏன்னா, அன்பரசன், காஞ்சிபுரம்வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலராகவும் இருக்கறதால, அவரது கட்டுப்பாட்டுல இந்த ரெண்டு தொகுதிகளும் வரது... 'அவரது எல்லைக்குள்ளமூக்கை நுழைச்சு வம்பைவிலைக்கு வாங்கணுமான்னு காந்தி தயங்கறார்'னு கட்சியினரே முணுமுணுக்கறா ஓய்...” என்றார், குப்பண்ணா.“மூட்டை மூட்டையாரேஷன் அரிசியை கடத்துறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.“எந்த ஊருலங்க...” எனகேட்டார், அந்தோணிசாமி.“செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்துார் பகுதியில் ரெண்டு ரேஷன் கடைகள்அரிசி கடத்தல் கனகச்சிதமா நடக்குது... இந்த கடைகள்ல, கார்டுதாரர்களுக்கு இலவச அரிசியை வழங்காம, கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கு தினமும் மூட்டை கணக்குல விற்பனை பண்றாங்க பா...“சில கார்டுதாரர்களுக்கு5 கிலோ அரிசியை மட்டும் குடுத்துட்டு, 20 கிலோன்னு பதிவு செஞ்சிடுறாங்க... பகல் நேரத்துலயே, எந்த பயமும் இல்லாம இருசக்கர வாகனங்கள்ல வர்றவியாபாரிகள், அரிசி மூட்டைகளை துாக்கிட்டுபோறாங்க பா...“ரேஷன் பொருட்கள் முறையா பொதுமக்களுக்குபோகுதான்னு கண்காணிக்க வேண்டிய அதிகாரியின் வீடே, இந்தரேஷன் கடைக்கு பின்னாடி தான் இருக்கு...சில விற்பனையாளர்கள்,அதிகாரியின் வீட்டு வேலைகளையும் சேர்த்துபார்க்கிறதால, கள்ளச்சந்தை அரிசி விற்பனைக்குஅவங்களும் உடந்தையாஇருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.“வாய்க்காலை ஆக்கிரமிச்சு, 'பார்க்கிங்' கட்டியிருக்காவ வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.“எந்த ஊருல பா...” எனகேட்டார், அன்வர்பாய்.“திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனைஇருக்கு... இதை அடிக்கடி விரிவாக்கம் பண்ணிட்டே போறாவ வே...“சமீபத்துல, மருத்துவமனை பக்கத்துல இருக்கிற வாய்க்கால் கரையோடு சேர்த்து, பலகோடி ரூபாய் மதிப்புள்ளஅரசு இடத்தையும் வளைச்சு, 'பார்க்கிங்' அமைச்சு, காம்பவுண்ட் சுவரும் கட்டிட்டாவ... இதுக்கு, அந்த ஏரியா வருவாய் துறை அதிகாரிக்கு பல லட்சங்கள் கைமாறியிருக்கு வே...“மாநகராட்சி அதிகாரிகளும், மாவட்டத்தின் முக்கிய அரசியல் புள்ளியும் மருத்துவமனைக்கு உதவிகரமா இருக்காவ...ஏற்கனவே, மருத்துவமனையின் ஒரு பக்கம் இருக்கிற மாநகராட்சி பூங்காவை ஆக்கிரமிக்க பார்த்தாவ வே...“இது சம்பந்தமா, 'தினமலர்' பேப்பர்ல செய்தி வரவே, பூங்கா தப்பிச்சிட்டு... இப்ப, பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை, 'ஆட்டை' போட்டுட்டாவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Raj
டிச 22, 2024 17:11

என்னுடைய கார்டுலயும் மாசாமாசம் 20 கிலோ அரிசி வாங்குனதா மெசேஜ் வருது. யார்கிட்ட சொல்ல. மேலிட பிரஷர்ல இப்படி நடக்குதோ.


Anantharaman Srinivasan
டிச 22, 2024 15:09

ரேஷன் அரிசி கடத்தல் நடக்காத கடைகளே தமிழ்நாட்டில் கிடையாது. அந்தந்த ஏரியா கவுன்சிலரின் குடும்த்தினருக்கு இது பார்ட்டைம் ஜாப்..part time job


VSMani
டிச 22, 2024 13:54

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை - பெயர் என்ன?


rasaa
டிச 22, 2024 10:47

இதுதான் திராவிட மாடல். இதைதான் பி.ஜே.பி. இல்லாத பிற மாநிலங்கள் கடைபிடிக்கின்றன என முதல்வர் கூறுகின்றார்.


நிக்கோல்தாம்சன்
டிச 22, 2024 07:25

இனி அரசு அந்த திருச்சி அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆவண செய்யவேண்டும் இல்லை என்றால் நீதிபதி அபய் மற்றும் ஜஸ்டின் தலையிட்டு ஆவண செய்வார்கள்


kumar
டிச 22, 2024 03:15

ஏழை மக்களின் அரிசி , மக்களின் நிலம், சில பணக்கார வியாபாரிகளுக்கு சேர்கிறது . தமிழ் நாட்டில் லஞ்சம், ஊழல் , கொலை , கொள்ளை , ஆக்கிரமிப்புகள் , தலை விரித்தாடுகின்றன . திராவிட மாடல் நன்கு தெரிகிறது . அடிப்படை வசதிகள் அம்போ . எந்த துறையிலும் , எந்த மட்டத்திலும் புரையோடிய ஊழல் . எந்த ஊழல் கொம்பனும் குறை சொல்லமுடியாத அளவு விடியா அரசு நடக்கிறது . இந்த லட்சணத்தில் முன்னேற்ற பணிகளுக்கு இன்னும் 26000 கோடி ஒதுக்க வேண்டும் என்று கூசாமல் கேட்கிறார் அமைச்சர். 2000 ரூபாய்க்கும் , இலவசங்களுக்கும் , வாய் சவடால்களுக்கும் , மத ஜாதி சலுகைகளும் திமுகவுக்கு வாக்களிக்கும் மக்கள் வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையை அழிக்கிறோம் என்ற நினைப்பில்லையே . பாரதி சொன்னது போல் நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரை நினைந்து விட்டால்


முக்கிய வீடியோ