உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஐஸ் யூனிட் உரிமையாளர் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஐஸ் யூனிட் உரிமையாளர் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டையில், 'ஐஸ் யூனிட்' உரிமையாளர் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், 65. இவர், தண்டையார்பேட்டையில் 'ஜெயவாணி ஐஸ் யூனிட்' என்ற நிறுவனம் நடத்தி வருகிறார்.இங்கு, ஐஸ்கிரீம் வகைகள், குளிர்பானங்கள் உள்ளிட்டவை தயாரித்து, மொத்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி தாரகேஸ்வரி, 60. இவர்களது மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மகன் பிரகலாத் நரசிம்மன், 32, தந்தையுடன் சேர்ந்து தொழிலை கவனித்து வருகிறார்.கடந்த நான்கு மாதங்களாக, கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பிரகலாத் நரசிம்மன், சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று தன் அறையில் இருந்த பிரகலாத் நரசிம்மன், தனக்கு தானே துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்து காசிமேடு போலீசார், தடயவியல் நிபுணர்கள் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து, உடல் பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மன உளைச்சலில் இருந்த பிரகலாத் நரசிம்மன், தன் தாய் தாரகேஸ்வரி பாதுகாப்பிற்காக வைத்திருந்த உரிமம் பெற்ற ஸ்போர்ட் வகை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !