பராமரிப்பு பணி நேர்மை நகர் மயானம் மூடல்
சென்னை, திரு.வி.க.நகர், நேர்மை நகர் மயான பூமி தகனமேடையில் பழுது சரிபார்க்கும் பணி நடைபெறுவதால், தற்காலிகமாக மூடப்படுகிறது.இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:திரு.வி.க.நகர் மண்டலம், 66வது வார்டுக்கு உட்பட்ட நேர்மை நகர் மயானபூமியில் உள்ள எரிவாயு தகனமேடையின் புகைபோக்கியில், பழுதுகளை சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது. எனவே, நாளை முதல் ஜூன் 4ம் தேதி வரை மயான பூமியில் எரிவாயு தகனமேடை இயங்காது.இந்நாட்களில், 67வது வார்டுக்கு உட்பட்ட தாங்கல் மயானபூமியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.