உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் சிக்கினார்

தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் சிக்கினார்

துாத்துக்குடி: காட்டுப்பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர். துாத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தோட்ட வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அவருடன் வேலை பார்த்தவர்கள் முன்னால் சென்று விட்டதால் அந்த பெண் மட்டும் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அதை நோட்டமிட்ட ஒருவர், திடீரென அந்த பெண்ணின் வாயை சேலையால் பொத்தி காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார். அந்த பெண் கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு முன்னால் சென்று கொண்டிருந்த சக தொழிலாளர்கள், விரைந்து வந்து அப்பெண்ணை மீட்டனர். மேலும், பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டவரை தாக்கிய அவர்கள், புதுக்கோட்டை போலீசில் அவரை ஒப்படைத்தனர். விசாரணையில், ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த முருகன், 43, என்பது தெரிந்தது. அவர் மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முருகன் மீது வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த நபர், ஜாமினில் வெளியே வராதபடி, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை