உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / வேதங்களையும் மதம் மாற்றும் மிஷனரிகள்!

வேதங்களையும் மதம் மாற்றும் மிஷனரிகள்!

- அரவிந்தன் நீலகண்டன் -மதமாற்றம் செய்வது தான், கிறிஸ்துவத்தின் தலையாயப் பணி. இதற்காக சர்ச்சுகளால் நியமிக்கப்பட்டவர்கள் தான், 'ஊழியக்காரர்கள்!' மதமாற்றத்திற்காக கிறிஸ்துவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள், 'சுவிசேஷ' கூட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.சில சமயங்களில், சிறப்பு பலி, ஆராதனை என்ற பெயர்களில் இந்த மதமாற்றக் கூட்டங்கள் நடக்கும். இதற்கு முன் நமக்கு பரிச்சயம் இல்லாத பெயர்களில் மதமாற்றத்தை நடத்தி வந்த கிறிஸ்துவக் கும்பல்கள், தற்போது இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் நெருக்கமான சொல்லாடல், அதிகம் காதில் கேட்கப்பட்ட சமஸ்கிருத மந்திரங்களை பயன்படுத்தி, மதமாற்றம் செய்ய ஆரம்பித்து இருக்கின்றன.உதாரணத்திற்கு தமிழகத்தின் நெல்லை, கன்னியாகுமரி, துாத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்குச் சென்று, 'வேதம்' என சொல்லி பாருங்கள். உடனே அங்குள்ள பெரும்பாலான மக்களின் நினைவுக்கு வருவது பைபிளாக தான் இருக்கும்.

'பிரஜாபதி'

அந்த அளவுக்கு ஹிந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான ரிக், யஜுர், சாம, அதர்வண என்ற நான்கு வேதங்களையும், கிறிஸ்துவர்கள் தங்களுக்கு சொந்தமான வார்த்தையாக மாற்றிக்கொண்டனர். இப்போது, அன்னிய மதத்திற்கு மாறினால் ஏற்படும் குற்ற உணர்ச்சியைப் போக்க, கூச்சமே இல்லாமல் இயேசு, வழிபாட்டை ஆதியில் ரிஷிகளும், முனிவர்களும் பின்பற்றியதாக பொய்யான ஒரு கட்டமைப்பை கிறிஸ்துவ மிஷனரிகள் உருவாக்கி இருக்கின்றன.இதற்காகவே, தமிழகத்தில் உள்ள பல சர்ச்சுகளில் சமீபகாலங்களாக, 'பிரஜாபதி' என்ற ஹிந்துக்களின் சொல் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஹிந்துக்களின் ரிக் மற்றும் யஜுர் வேத காலங்களில், 'பிரஜாபதி' என்ற பெயர், படைப்பு கடவுளான பிரம்மனை குறிப்பதாக இருந்தது. தவிர, சில புராண ஹிந்து நுால்களும், 'பிரஜாபதியே பிரம்மன்' என குறிப்பிடுகிறது.ஆனால், நீங்கள் சாதாரண கிறிஸ்துவ மதபிரசாரகரிடம் சென்று பிரஜாபதி யார் என கேட்டால், தயக்கமே இல்லாமல் அவர், 'இயேசு தான் பிரஜாபதி' என அடித்து கூறுவார். போதாக்குறைக்கு ஹிந்துக்களின் வேத நுால்களையும் துணைக்கு இழுத்து காட்டுவார். ஹிந்துக்களின் அடிப்படை கோட்பாடுகள் அப்படியே கிறிஸ்துவ மயமாக்குவதற்கு, அரசியல் ரீதியான வழிகளையும் கிறிஸ்துவ மிஷனரிகள் மிக சாமர்த்தியமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன.'ஓம் ஷலோம்' என்ற இசை நாடகங்களை கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தி வருகின்றன. இதில் பிரபல திரைப்பட நடிகர், 'நிழல்கள்' ரவி நடித்து வருகிறார். இத்தனைக்கும் இவர், பாரம்பரிய வைஷ்ணவ குடும்பத்தை சேர்ந்தவர். இந்த இசை நாடகத்தின் தலைப்பு ஏதோ ஒரு கலாசார உரையாடல் போல தோன்றினாலும், உண்மையில் ஹிந்து மதத்தின், 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும், 'பிரஜாபதி' என்பவர் இயேசுவே என்ற கருத்தையும் துாக்கி பிடிக்கிறது. அதாவது ஹிந்துக்களின் வேத குறியீடுகளைக் கொண்டு, அவர்களின் ஆழமான நம்பிக்கைகளை திசை திருப்பும் முயற்சியாகவே இந்த நாடகம் நடத்தப்படுகிறது.

பம்மாத்து வேலை

'ஓம் ஷலோம்' நாடகக் குழுவினருக்கு பக்கபலமாக இருக்கும் தி.மு.க., முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், பீஹாரில், 'ஜெம்ஸ்' என்ற கிறிஸ்துவ மிஷனரி நடத்தி வரும் பாஸ்டர் அகஸ்டின் ஜெபகுமாருக்கு உதவி வருகிறார். இதன் மூலம், வடமாநிலங்களிலும், 'வேத இயேசு' பிரசாரத்தைக் கொண்டு செல்வதற்கான திட்டங்களுக்கு, சத்தமின்றி அரசியல் பலமும் பயன்படுத்தப்படுகிறது.தற்போதைய த.வெ.க., - எம்.எல்.ஏ.,வும் தமிழக சபாநாயகருமான ஜே.சி.டி. பிரபாகர், இயேசுவை வேத கால பிரஜாபதியாக சித்தரிக்கும், 'பிரஜாபதி' திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டிருக்கிறார். 19ம் நுாற்றாண்டில் கிறிஸ்துவ மிஷனரிகள் உருவாக்கிய, 'நிறைவேற்று கோட்பாடு' அடிப்படையிலேயே இந்த பிரஜாபதி இயேசு கோட்பாடும் உருவாக்கப்பட்டுள்ளது.ஹிந்துக்கள் போற்றும் வேதங்களில் இயேசு பற்றி எந்தவொரு ஆதாரத்தையும், கிறிஸ்துவர்களால் மேற்கோள் காட்ட முடியாது. இதனால், போலியான சமஸ்கிருத மந்திரங்களையும் கிறிஸ்துவ மதபிரசாரகர்கள் தற்போது உருவாக்க ஆரம்பித்து விட்டனர். ஹிந்து மதத்தின் உயிரோட்டமான உருவ வழிபாடு, கோவில் ஆகமங்கள், பக்தி இலக்கியங்கள், புராணங்கள் ஆகியவை முறைகேடானவை என சித்தரிக்கப்படுகின்றன.வேதங்களை கிறிஸ்துவமயமாக்கும் பம்மாத்து வேலை காலனி ஆதிக்க காலத்திலேயே தொடங்கப்பட்டு விட்டது. தற்போது, வெகுஜன ஊடகங்கள் வழியாக தீவிரமான மதமாற்ற பிரசாரமாக உருவெடுத்துள்ளது. சாது செல்லப்பா போன்ற சுவிசேஷ பிரசாரகர்கள், பிராந்திய கட்சிகளின் ஆதரவுடன், 'பண்டைய வேதங்களில் கிறிஸ்து' என்ற பெயரில் துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர்.இயேசுவை ஏற்பது தான் இறுதியான வழி என ரிஷிகள் வேதங்களில் மறைபொருளாக சொல்லி இருப்பதாக பொய் கூறி, ஹிந்துக்களை மதம் மாற்றுவதற்கான உளவியல் தடைகளை உடைக்கும் வேலைகள், திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

பொய் பிரசாரம்

கிறிஸ்துவ மிஷனரிகளின் இந்த விஷமத்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக வேத பண்பாட்டை சிதைக்கும் முயற்சிகளை தடுக்க வேண்டும்.* ஹிந்து பண்பாடு, பாரம்பரியத்தின் ஆணிவேரான ரிஷிகளின் பரந்த பார்வையைச் சுருக்கி, 'பாவத்திற்காக ரத்த பலி கொடுத்தல்' என்ற கிறிஸ்துவ கோட்பாட்டிற்குள் அடைத்து, நம் ஆன்மிக தனித்துவத்தை அழிக்க பார்க்கின்றனர்* வேதங்கள் என்பது ஏதோ முழுமை பெறாத ஆரம்பக்கட்ட உள்ளூர் நுால்கள் மட்டுமே என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. 'யூதர்களுக்கு இறை துாதர்கள் மூலமும், இந்தியர்களுக்கு ரிஷிகள் மூலமும் கடவுள் பேசினார்; ஆனால், இந்த இரு வழிகளும் சிலுவையில் தான் முடிகின்றன' என்று கூறி வேதங்களை கிறிஸ்தவத்தின், 'பழைய ஏற்பாடு' நிலைக்கு தள்ளுகின்றனர்* ஆதியில் வேதங்கள் ஒரே தெய்வ வழிபாட்டை மட்டுமே கொண்டிருந்தன என்றும்; பின்னாளில் இவை சீரழிக்கப்பட்டு விட்டன என்றும் பொய்யாக பிரசாரம் செய்யப்படுகிறது.கிறிஸ்துவ மிஷனரிகளின் இந்த பொய்யான பிரசாரங்களை தடுக்க, நம் பாரம்பரியம் மற்றும் வேதங்களின் உண்மையான தத்துவார்த்த ஆழத்தை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.கலாசாரத் திருட்டை சட்ட ரீதியாகவும் அறிவுப்பூர்வமாகவும் எதிர்த்து நிற்க வேண்டும். அப்போது தான், இந்தப் பண்பாட்டுத் தாக்குதலை எதிர்கொள்ள முடியும். இல்லாவிட்டால், ஹிந்து மதத்தின் விசேஷமான ஆன்மிக அடையாளங்கள் அனைத்தும் அன்னிய மதத்தினர் சொந்தம் கொண்டாடி சின்னாபின்னமாக்கி விடுவர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

Jkumar
அக் 25, 2026 11:16

Missionaries are on prostelysation spree and on a tornado speed due to Christian population all over Europe and US dwindling due to many social defects speacially due to wokism and the savage two world wars . At the same time the Muslim population all over the world is growing in geometrical proportion which poses a danger for all other faiths . The world is definitely going to face a danger a crisis within this century. Having anticipated this the jesuits are converting all and sundry at break speed by all means lies , cheating bribing seducing plagiarising all under the sun and on the other side instead of conversion other faith is multiplying fast . The race is on and competition is picking up speed. Hindus Sikhs Jains Buddhists are all caught in between. Democracy will crumble theocracy will prevail that too in anarchic conditions .


GUNA SEKARAN
அக் 24, 2026 23:32

விஷ நரிகள்


man
அக் 24, 2026 19:33

நாங்கள் இப்பொழுது இந்து மதத்தை பின்பற்றுகிறோம் எங்கள் முன்னோர்களும் இந்துக்களை ஆனால் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டோம் எங்களுக்கு மதம் தேவையில்லை அவரைப் பிடித்தது நேசிக்கிறோம் அவரையும் பெருமாள் பிள்ளையாரப் போல் இயேசுவை நேசிக்கிறோம்


ஆரூர் ரங்
அக் 24, 2026 21:54

ஆனா அவரு கர்த்தர் தவிர மற்றவர்களை வணங்குவது சைத்தான் வழிபாடு. பாவம் என்றாரே.


Anantharaman Srinivasan
அக் 24, 2026 19:29

அடுத்து இந்துக்கள் அமாவாசை.திதி கொடுப்பதுபோல் இவங்க பௌர்ணமிக்கு கொடுக்க ஆரம்பிப்பார்கள்.


c.mohanraj raj
அக் 24, 2026 18:12

சாதாரண ஒரு சினிமா பாடலை எனக்கு சொந்தம் எழுதியவர்கள் கொண்டாடுகிறார்கள் ஒரு கதையை இது என்னுடையது என்று வழக்குத் தொடுக்கிறார்கள் ஆனால் பாரம்பரியமாக இருக்கும் ஓர் இந்து அப்படியே காப்பி அடித்துக் கொண்டிருக்கின்றார்கள் இது ஏன் சட்டம் வேடிக்கை பார்க்கிறது என்று தெரியவில்லை ஹிந்துக்கள் என்று நேரடி நடவடிக்கையில் ஈடுபடுகிறார்களோ அன்றுதான் இந்து மதம் தப்பிக்கும் சட்டத்தையோ ஆட்சியாளர்களையோ நம்பி பிரயோஜனம் இல்லை


சூர்யா
அக் 24, 2026 18:00

சமீப நாட்களாக பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை போவது போல் வேளாங்கண்ணிக்கும் பாதயாத்திரை போகிறார்கள். எங்கு போடுவார்கள் எனத் தெரியாது. சில பேர் மொட்டை கூட போட்டுக் கொள்கிறார்கள். இந்துக்கள் பழக்க வழக்கங்களில் அவர்களையும் முழுமையாக புகுத்தி கொள்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு தேவாலாய விழாவில் அலங்காநல்லூர் அளவிற்கு பெரிய அளவில் ஜல்லிக்கட்டு கூட நடத்துகிறார்கள்.


நிமலன்
அக் 24, 2026 17:43

கோபத்தில் கருத்துக்களை பதிவிடும் நண்பர்களுக்கு. உங்கள் வீட்டிற்கு ஒருவன் திருட வருகிறான் என்றால் நாம் முதலில் என்ன செய்வோம். நம் வீட்டை பூட்டி வைப்போம். அது போல தான். மதம் மாற்றுவது அவன் வேலை. தொழில் என்று கூட சொல்லலாம். மிருகங்கள் அதன் இஷ்டத்திற்கு வாழ்வது அதன் குணம் நண்பர்களே. பசியை போக்க அவைகள் மற்ற பிராணிகளை கொன்று தின்பதும் அதன் குணம். இந்த மதமாற்று வியாபாரிகளை அவ்வாறுதான் நாம் நடத்த வேண்டும். ஒரு நண்பர் இங்கு சொன்னது போல், நம் வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்து மதம் சம்பந்தபட்ட விஷயங்களை சொல்வோம். யூ டியூபில் இந்து தெய்வங்கள் பற்றிய புராணங்கள், இதிகாசங்கள் கொட்டி கிடக்கிறது. நாம் பார்க்க, கேட்க வேண்டும். இவர்களால் பிராமணர்களை ஏன் அவ்வளவு எளிதாக மதம் மாற்ற முடியவில்லை என்றால், அவர்களின் பழக்க வழக்கங்கள். இருந்தாலும் சிறுவயது பிராமணர்கள் சிலர் இவர்களுடன் மாட்டிக்கொண்டு மதம் மாறிவிடுகின்றனர். அது வேறு விஷயம். ஆனால் பிராமணர் அல்லாதவர்கள் இவர்களிடம் சுலபமாக மாட்டி கொள்கிறார்கள். காரணம் தமிழில் உள்ள சிவபுராணம், விஷ்ணுபுராணம், முருகன், ஆண்டாள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் எழுதிய பாடல்களை, கதைகளை கூட படிப்பதில்லை. நாம் முதலில் இவைகளை படிப்போம். நாம் படிக்க துவங்கிவிட்டோம் என்று தெரிந்தாலே, மத மாற்று வியாபாரிகள் வர மாட்டார்கள்.


kulanthai kannan
அக் 24, 2026 16:49

உலகிலேயே மிகப்பெரும் பித்தலாட்டக் கூட்டம்


எஸ் ஆர்
அக் 24, 2026 15:39

முதலில் மத சார்பற்ற நடுநிலை இந்துக்கள் திருந்த வேண்டும். நம் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து செல்ல வேண்டும். நம் மதம் பற்றி சொல்லி தர வேண்டும். காதலுக்காக மதம் மாறக்கூடாது. இந்து மதத்தை இழிவுப்படுத்தும் கட்சிகளுக்கு ஓட்டு போட கூடாது. இவற்றையெல்லாம் கடைபிடித்தால் இந்நிலை மாறும்


Anantharaman Srinivasan
அக் 24, 2026 19:21

முதலில் மத சார்பற்ற இந்துக்கள் திருந்த வேண்டடுமென்றால் என்ன அர்த்தம்..? மற்றவை ஒகே.


Sivaagiri
அக் 24, 2026 14:40

சர்ச்சுகளில் இப்போதெல்லாம் , கோவில் போலவே , கொடி மரம் தங்க கவசம் பொருத்தி , கொடி ஏற்றுகிறார்கள் , புதிதாக சுற்று பிரகாரங்களில் பெரிய பையன் ஏசு , குழந்தை இயேசு, மேரி , குழந்தையோடு மேரி , இப்டி சிலைகள் வைத்து , அதற்கு மெழுகு வர்த்தி அகல்விளக்கு , பொருத்துகிறார்கள் , பூ மாலை தேங்காய் பழம் அர்ச்சனை செய்கிறார்கள் , திருப்பண்டம் என்ற பெயரிட்டு , - புளியோதரை பொங்கல் தயிர்சாதம் வடை கொடுக்கிறார்கள் - - பிரசாதமாம் ? ? மாதா மாதம் பௌர்ணமி பூஜை அமாவாசை அபிஷேகம் , ஊர்வலம் - ஊர்வலத்தில் தேர் , திருப்பதி குடை போல குடைகள் , நாதஸ்வர தவில் , செண்டை மேளங்கள் , பரத நாட்டியம் கரகாட்டம், அத விட கொடுமை , திருச்சாம்பல் என்ற பெயரிட்டு , விபூதியை கொடுக்கிறார்கள் , நெற்றியில் சிலுவை போட்டுக் கொல்லுறார்கள் , அதோடு , யேசப்பா சகஸ்ர நாமாவளி , அஷ்டோத்திர அர்ச்சனை, யேசப்பாவுக்கு அபஷேக ஆராதனைகள் - = சும்மா வாயால் சொல்லுவார்கள் - - எப்படி எப்படி ஏமாத்தலாமோ., பிளான் பண்ணி , பண்றங்க,


Anantharaman Srinivasan
அக் 24, 2026 19:24

Very good sivagiri .. நான் எழுத நினைத்தை நீ சொல்லி விட்டாய்.