உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார், ரீபெரும்புதுார் -- திருவள்ளூர் நெடுஞ்சாலையில், தினமும் 30,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை வழியாக கிளாய், செங்காடு, வடமங்கலம், வயலுார், தொடுகாடு, மண்ணுார், வளர்புரம் உள்ளிட்ட கிராமத்தினர், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதுாரை சுற்றியுள்ள சிப்காட் தொழில் பூங்காவில் இயங்கி வரும் ஏராளமான தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஊழியர்களை ஏற்றி செல்லும் தனியார் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் அதிகம் சென்று வருகின்றன.போக்குவரத்து அதிகளவில் உள்ள இந்த சாலையில், கிளாய், செங்காடு, தொடுகாடு உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளை வளர்ப்போர், கொட்டகையில் வைத்து பராமரிக்காமல் சாலையில் விடுகின்றனர்.அவை, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிவதுடன், சாலை நடுவே படுத்து ஓய்வெடுக்கிறது. திடீரென சாலையின் குறுக்கு, நெடுக்குமாக ஓடும் மாடுகளால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள், மாட்டின் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நெடுஞ்சாலையில் போக்கு வரத்திற்கு இடையூறாக சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை