உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பெருமாட்டுநல்லுாரில் புது மின்மாற்றி அமைப்பு

பெருமாட்டுநல்லுாரில் புது மின்மாற்றி அமைப்பு

கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில் நிலவிய குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வாக, 100 கே.வி., திறனுள்ள புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மறைமலை நகர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில், 16,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.தனியார் குடியிருப்புகள் மற்றும் புதிதாக வீடு கட்டி குடியேறுவோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக, இங்கு அடிக்கடி மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்த வினியோக பிரச்னை நிலவியதால், பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு பல தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் சென்றன.இதையடுத்து, மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வாக, புதிய மின்மாற்றி அமைக்க, மின்வாரிய நிர்வாகம் முடிவெடுத்து, அதற்கான பணிகளை கடந்த மாதம் துவக்கியது.தொடர்ந்து, பெருமாட்டுநல்லுார், துங்கபத்ரா நகரில், 100 கே.வி., திறனுள்ள புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி