உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மகளிர் உரிமை தொகைக்கு அதிகாரிகளின் பலே பிளான்!

மகளிர் உரிமை தொகைக்கு அதிகாரிகளின் பலே பிளான்!

ந ண்பர்கள் நடுவில் அமர்ந்தபடியே, ''மன உளைச்சல்ல இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்தில், 'துணை' அதிகாரியா இருக்கறவர், ஏழு வருஷமா இங்கேயே தான் இருக்கார்... இதனால, இவர் வச்சது தான் சட்டம்னு ஆகிடுத்து ஓய்... ''அதாவது ஊராட்சி கள்ல சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி எல்லாம் நிர்ணயம் பண்றாளோல்லியோ... இந்த ஆவணங்களை எல்லாம் ஊராட்சி செயலர்கள், இவரிடம் குடுத்து, கம்ப்யூட்டர்ல, 'அப்லோடு' பண்றா ஓய்... ''இந்த வரி விதிப்பு ஆவணங்களை கம்ப்யூட்டர்ல ஏத்தணும்னா, ஊராட்சி செயலர்களிடம், 'கட்டிங் வெட்டணும்'னு அதிகாரி கறாரா கேக்கறார்... பணம் தர மறுத்துட்டா, அந்த ஊராட்சிகளின் ஆவணங் களை கம்ப்யூட்டர்ல ஏத்தாம கிடப்புல போட்டுட றார்... இதனால, ஊராட்சி செயலர்கள் மன உளைச்சல்ல இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''சந்திரன், தள்ளி உட்காரும்...'' என்ற அந்தோணிசாமியே, ''பணம் இல்லாம திண்டாடுறாங்க...'' என்றார். ''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா. ''கூட்டுறவு வங்கிகள்ல நகைகளை அடகு வச்சா, சட்டசபை தேர்தல்ல நகை கடன் தள்ளு படி பண்ணிடுவாங்கன்னு எதிர்பார்க்கிற மக்கள், வங்கிகளுக்கு படை எடுக்கிறாங்க... ''இது சம்பந்தமா, 'தினமலர்' நாளிதழ்ல செய்தியும் போட்டிருந்தாங்க... அதே நேரம், ஒட்டுமொத்தமா மக்கள் இப்படி கடன் கேட்டு வர்றதால, பணம் இல்லாம கூட்டுறவு வங்கி அதிகாரிகள் திண்டாடுறாங்க... ''நகைகளை அடகு வைக்கிறவங்களிடம், 'இப்ப பணம் இல்ல... நகையை அடகு வச்சுட்டு போங்க... மூணு, நாலு நாள் கழிச்சு பணம் வந்ததும் வாங்கிட்டு போங்க'ன்னு சொல்றாங்க... மக்களும் எப்படியும் கடன் தள்ளுபடியாகிடும்னு நம்பி, நகைகளை அடகு வச்சுட்டு போறாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''இதே மாதிரி பண விவகாரம் என்கிட்டயும் இருக்குல்லா...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''நடப்பு நிலவரப்படி, தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை திட்டத்தில், 1 கோடியே, 12 லட்சத்து, 50,000 பேருக்கு மாசம், 1,000 ரூபாய் குடுக்காவ... இப்ப, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள்ல, 25 லட்சம் புதிய விண்ணப்பங்கள் வந்திருக்கு வே... '' இதுல முதல் கட்டமா, 10 லட்சம் பேரை பயனாளிகளா சேர்க்கிறதுக்கு, நிதி நிலவரம் எப்படியிருக்குன்னு சம்பந்தப்பட்ட துறைகளின் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கூடி ஆலோசனை பண்ணியிருக்காவ... ஆனா, கஜானா நிலவரம் கலவரமா இருக்கிறதால, இவ்வளவு பேருக்கும் பணம் தர முடியாதுன்னு தெரிஞ்சிட்டு வே... ''இதனால, இப்ப உரிமை தொகை வாங்கிட்டு இருக்கிற, 1.12 கோடி சொச்சம் பேர்ல, யார் யார் அந்த பணத்தை வங்கியில இருந்து எடுக்காம சேர்த்து வச்சிருக்காங்க மற்றும் வசதியா இருக்கிறவங்க யார் யார்னு கணக்கு எடுக்க போறாவ... அவங்களுக்கு எல்லாம் பணம் வழங்குறதை நிறுத்திட்டு, புதுசா வந்த, 10 லட்சம் பேருக் கும் குடுத்துடலாம்னு திட்டம் போட்டிருக்காவ... ''அதே நேரம், உரிமை தொகை நிறுத்தப்பட்டவங்க கேட்டா, 'பரிசீலனை பண்ணிட்டு இருக்கோம்'னு சொல்லியே, தேர்தல் வரைக்கும் காலத்தை கடத்திடலாம்னும், 'பிளான்' பண்ணிட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி. அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

D.Ambujavalli
செப் 20, 2025 18:55

தேர்தல் வெற்றிக்காக ஜம்பமாக வாக்குக்கொடுப்பானேன் இப்போது கொடுத்ததை நிறுத்திவிட்டு, புதுசாக சிலருக்கு கொடுத்துவிட்டால், நிறுத்தப்பட்டவர்கள் சும்மா இருப்பார்களா? அரசுக்கென்ன, 10 லட்சம் என்ன 20 லட்சம் கோடிகூடக் கடன் வாங்கி, மாநிலத்தை திவாலாக்கிவிட்டுப் போய்விடும் இந்த ‘உரிமைத்தொகை’ சிந்துபாத் கிழவனைப்போல், மாநிலத்தை ஒரு வழி பண்ணாமல் விடாது


duruvasar
செப் 20, 2025 15:06

இப்போது திமுக பேனர்களில் " உலகம் போற்றும் உத்தமரே " என்ற ஸ்டாலின் படத்தை அதிகம் பார்க்கமுடிகிறது . அதன் பிண்ணனி இப்போதான் புரிகிறது.


Kanns
செப் 20, 2025 08:08

Recover All Freebies 90%Not Due But Vote Briberies from All Concerned RulingParty Men Misusing Governance Besides DeRecognition, Arrest-Prosecution for Grave Financial Misappropriations& Subversions of Democracy


Anantharaman Srinivasan
செப் 20, 2025 00:39

2026 தேர்தலுக்கு பின் மகளிர் உரிமை தொகை பாதியாக குறைக்கப்படும் அல்லது ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி பலருக்கு நிறுத்தவும் வாய்ப்பு. பலே பிளான்


HoneyBee
செப் 20, 2025 16:35

மொததமாவே நிறுத்தி புடுவாக.. அம்புட்டு தான் ஜோலி முடிஞ்சு போச்சு டோப்பா கழண்டு போச்சு


புதிய வீடியோ