உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மல்லிகேஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா துவக்கம்

மல்லிகேஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா துவக்கம்

மண்ணடி, மல்லிகேஸ்வரர் கோவில், பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.மண்ணடி, லிங்கி செட்டி தெருவில், சென்னை, முத்தியால்பேட்டை மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த கோவிலில், பங்குனி மாத 14 நாள் பெருவிழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.முன்னதாக, கொடிமரம் முன் கலசம் நிர்மாணிக்கப்பட்டு, மஹா யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து, சூலத்திற்கு மஹா அபிஷேகம் நடந்து கொடியேற்றம் நடந்தது. பின், கொடிமரத்திற்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள் நீர் உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பிரம்மாண்ட தொட்டியில் உற்சவர் மல்லிகேஸ்வரர், தாயாருடன் எழுந்தருளிய, சவுடல் உற்சவம் நடந்தது.மாலையில், சந்திரபிரபையில் சுவாமி எழுந்தருளல் வைபவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, 63 நாயன்மார்கள் உற்சவம், 7 ம் தேதியும் ; திருத்தேர் உற்சவம், 9 ம் தேதியும் நடக்கிறது. வரும் 11 ம் தேதி இரவு புஷ்ப பல்லக்கு, 13 ம் தேதி இரவு பந்தம் பறி உற்சவம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ