உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் ஆர்ப்பாட்டம்

பென்னாகரம்:பென்னாகரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்கள் பென்னாகரம் பி.டி.ஓ., அலு-வலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் ராஜி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். மாநில துணைச்-செயலாளர் நாகராசன், மாவட்ட தலைவர் கலாவதி உள்ளிட்-டோர் கண்டன உரையாற்றினர்.இதில், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்து, வேலை இழக்கும் காலங்களில் பரிசல் ஓட்டிகள், சமையல், மசாஜ் தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பரிசல்கள் நிறுத்துமிடத்தில் நடைபாதை வியாபா-ரிகள் கடை அமைத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளதை திரும்ப பெற வேண்டும்.சமையல் தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும். மீன் கழிவுகளை சுத்திகரிப்பு, பரிசல் இயக்கும் நேரம் மாற்றம், தொழிலாளர் களுக்கு மருத்துவ பரி-சோதனை முகாம் உள்ளிட்ட நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்ப-டுத்த வேண்டும் எனக்கோரி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ