உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மாங்கால் கூட்டுச்சாலையில் நிழற்குடையின்றி பயணியர் அவதி

மாங்கால் கூட்டுச்சாலையில் நிழற்குடையின்றி பயணியர் அவதி

உத்திரமேரூர்,காஞ்சிபுரம் -- வந்தவாசி நெடுஞ்சாலையில், மாங்கால் கூட்டுச்சாலை உள்ளது. இந்த கூட்டுச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், வந்தவாசி, உத்திரமேரூர், செய்யாறு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன.இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால், பேருந்துக்காக வரும் பயணியர் நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. வெயில் மற்றும் மழை நேரங்களில் பயணியர் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும், மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர் ஆகியோர் பயணியர் நிழற்குடை இல்லாததால், அமர இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே, மாங்கால் கூட்டுச்சாலையில் நிழற்குடை அமைக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை