உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மணல் கடத்தலுக்கு உதவி மாட்டிய போலீசார்!

மணல் கடத்தலுக்கு உதவி மாட்டிய போலீசார்!

நாட்டு சர்க்கரை டீயை உறிஞ்சியபடியே, ''துணை முதல்வர் கனவும் தகர்ந்து, இருக்கிற பதவிக்கும் ஆபத்து வந்துட்டு வே...'' என, விவாதத்தை ஆரம்பித்தார்பெரியசாமி அண்ணாச்சி.''யாருங்க அது...'' என,ஆர்வமாகக் கேட்டார் அந்தோணிசாமி.''ஒடிசா மற்றும் தமிழககாங்., மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், ஜார்க்கண்டை சேர்ந்தவர்...சமீபத்துல, அங்க நடந்தசட்டசபை தேர்தல்ல போட்டியிட்டாரு வே...''ஜெயிச்சா, ஜார்க்கண்ட்முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி அரசுல, தனக்குதுணை முதல்வர் அல்லதுஅமைச்சர் பதவி கிடைக்கும்னு நம்பிட்டு இருந்தாரு... ஆனா, பா.ஜ., வேட்பாளரிடம்,42,000 ஓட்டுகள் வித்தியாசத்துல தோத்துப்போயிட்டாரு வே...''இப்ப, அவரிடம் இருக்கிற ரெண்டு மாநிலபொறுப்பாளர் பதவியிலும் ஒரு மாநிலத்தை பறிக்க மேலிடம் முடிவுபண்ணிட்டு... 'அது தமிழகமா, ஒடிசாவா'ன்னுஇங்க இருக்கிற காங்கிரசார் பட்டிமன்றம் நடத்திட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''கஷ்டப்பட்டு பிடிச்சுகுடுத்த லாரிகளை ஈசியாவிட்டுட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''எந்த ஊர்ல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''கிருஷ்ணகிரி மாவட்டம், தாவரக்கரை ஏரியா தனியார் குவாரியில் இருந்து, சமீபத்துல ரெண்டு லாரிகள்ல உரிய ஆவணங்கள்இல்லாம, கிரானைட் கற்களை கடத்திட்டுப் போனாங்க... தேன்கனிக்கோட்டை தாலுகா வருவாய்துறை அதிகாரிகள், லாரிகளை மடக்கி பிடிச்சு, தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைச்சிருக்காங்க பா...''வழக்கு பதிவு பண்ணி,லாரி டிரைவர்கள் மற்றும்உரிமையாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காம, பிடிபட்ட லாரிகளை கிரானைட் கற்களோடு விடுவிச்சுட்டாங்க... அதிர்ச்சியானவருவாய்த் துறையினர், போலீசாரிடம் கேட்டதுக்கு, 'மேலிடத்து பிரஷர்'னுஅசால்டா பதில் தந்திருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''என்கிட்டயும் இந்த மாதிரி ஒரு மேட்டர் இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''திருச்சி எஸ்.பி., வருண்குமார், கொள்ளிடம் பகுதியில் நடக்கும் மணல்கடத்தலை கட்டுக்குள்ளகொண்டு வந்தார்... இதனால, மணல் மாமூல்இல்லாம போலீசார் எல்லாம் தவியா தவிச்சுண்டு இருந்தா ஓய்...''சமீபத்துல, எஸ்.பி.,10 நாள் விடுமுறையில்போயிருக்கார்... உடனே,சமயபுரம் மற்றும் கொள்ளிடம் போலீஸ் அதிகாரிகள், மணல் கடத்தல்காரர்களை கூப்பிட்டு, '10 நாளைக்குஎந்த தொல்லையும் இல்லாம மணலை அள்ளிக்கலாம்'னு அனுமதி தந்துட்டு, சில லட்சங்களையும் கறந்துட்டா ஓய்...''இதனால, கொள்ளிடம் மற்றும் எசனைகோரை பகுதியில் நாலு நாளா மணல் கடத்தல் ஜோரா நடந்துது... இது பத்தி, எஸ்.பி.,யின்,'ஹெல்ப் லைன்'மொபைல் போனுக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்க, எஸ்.பி.,யின்உத்தரவுப்படி லால்குடி டி.எஸ்.பி., களமிறங்கி மணல் கடத்தலைநிறுத்திட்டார் ஓய்...''இப்ப, சமயபுரம் அதிகாரியை தென்மாவட்டத்துக்கு துாக்கி அடிச்சுட்டாங்க... கொள்ளிடம் அதிகாரியோ, தனக்கு தெரிஞ்ச பெண் இன்ஸ்பெக்டரைபார்த்து, டிரான்ஸ்பரை தடுக்க போராடிண்டு இருக்கார் ஓய்...'' எனமுடித்தார், குப்பண்ணா.பெஞ்சில் மேலும் சிலர்அமர, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
நவ 28, 2024 22:57

மணல் கொள்ளையில்லையேல் திராவிட அரசின் இதயத்துடிப்பு நின்றுவிடும். மதுவிலக்கு கொண்டுவந்தால் கோபலபுர கஜானா வரும்படி கோவிந்தா..


Sainathan Veeraraghavan
நவ 28, 2024 17:22

சாமி பட வசனம் ஞாபகம் வருது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை