உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பதிவு தபால் சேவை ரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பதிவு தபால் சேவை ரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன், ஓய்வூதியர்களின் அகில இந்திய கூட்டமைப்பு, மத்திய அரசு ஊழியர் இணைப்புக்குழு சார்பில் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கன்வீனர் ராமசாமி முன்னிலை வகித்தார். தபால் துறையில் நடைமுறையில் உள்ள, பதிவு அஞ்சல் சேவையை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள முடிவை கைவிட வேண்டும். தபால் துறையை சீரழிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும், தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என, வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அஞ்சல் ஆர்.எம்.எஸ்., ஓய்வூதியர் சங்க பொருளாளர் பழனிவேல் நன்றி கூறினார். நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பரமசிவம் உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி