உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். குடும்ப வரன்முறையுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை, 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும், உதவியாளருக்கு ஐந்து லட்ச ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட சி.ஐ.டி.யு., துணைத்தலைவர் ஜீவானந்தம், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி, பொருளாளர் கலா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை