உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / எம்.எல்.ஏ.,க்களிடம் சத்தியம் வாங்கிய மூத்த அமைச்சர்!

எம்.எல்.ஏ.,க்களிடம் சத்தியம் வாங்கிய மூத்த அமைச்சர்!

ஏலக்காய் டீயை ருசித்தபடியே, “அதிகாரியை கூப்பிட்டு, ‘கட்டிங்’ பட்டியலை குடுத்திருக்காரு பா...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய். “எந்த துறையில ஓய்...” என கேட்டார் குப்பண்ணா. “செங்கல்பட்டு தொகுதி த.வெ.க., முக்கிய புள்ளி, சமீபத்துல காட்டாங்கொளத்துார் ஒன்றிய அதிகாரியை தன் வீட்டுக்கு அழைச்சிருக்காரு... அப்ப, ‘மண்ணிவாக்கம் கிராமத்தில் கட்டுற புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி வழங்கியது யார்?’னு கேட்டவர், ‘அதுக்கான கமிஷன் எனக்கு வந்துடணும்’னு சொல்லியிருக்காரு பா... “அதோட, ‘தொகுதி முழுக்க கட்சி பேனர்கள் வைக்கவே எனக்கு மாசத்துக்கு, 5 லட்சம் ரூபாய் செலவாகுது... அதனால, என் தொகுதியில எங்கே வீடுகள், அடுக்குமாடிகள் கட்டினாலும் ஒரு வீட்டுக்கு தலா 3,000 ரூபாய் வீதம் எனக்கு வாங்கி குடுத்துடுங்க... அதுக்கு மேல அதிகாரிகள் எவ்வளவு வேணும்னாலும் வசூல் பண்ணிக்கலாம்’னு சொல்லியிருக்காரு பா... “கிட்டத்தட்ட மூணு மணி நேரத்துக்கு மேலா அதிகாரியிடம் பேசியிருக்காரு... அப்ப, வேற எந்த வழிகள்ல எல்லாம் தனக்கு கமிஷன் கிடைக்கும் என்ற விபரங்களை விரிவா கேட்டு தெரிஞ்சிக்கிட்டாரு பா...” என்றார் அன்வர்பாய். “கலைச்செல்வன் இப்படி உட்காரும்... தியாகராஜனுக்கு எல்லாத்தையும் விளக்கிட்டீரா...” என்ற குப்பண்ணாவே, “குறுநில மன்னர்களா செயல் படறா ஓய்...” என்றார். “யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி. “திருவள்ளூர் மாவட்டத்தில் பிரபல முருகன் கோவில் ஊர் ஒன்றிய ஆபீஸ் கட்டுப்பாட்டுல, 27 ஊராட்சிகள் இருக்கு... இந்த ஊராட்சிகளின் செயலர்கள் எல்லாம், ஒன்றிய துணை அதிகாரிகள் தய வுல குறுநில மன்னர்களா வலம் வரா ஓய்... “அவா இஷ்டத்துக்கு, ‘பில்’களை வச்சு மக்களின் வரிப்பணத்தை வாரி பாக்கெட்டுல போட்டுக்கறா... பில் தொகை விடுவிக்கறது, வளர்ச்சி பணிகளை ஆய்வு பண்றது போன்ற அதிகாரங்களை எல்லாம், ஒன்றிய துணை அதிகாரிகளிடம் குடுத்துட்டதால, அவா தயவுல ஊராட்சி செயலர்கள் புகுந்து விளையாடறா... ஒன்றிய கமிஷனரை கூட மதிக்க மாட்டேங்கறா ஓய்...” என்றார் குப்பண்ணா. “வீட்டுக்கு கூப்பிட்டு சத்தியம் வாங்கிட்டாரு வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... “த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்கள் பலர் அதிருப்தியில இருக்கிறதா தி.மு.க.,வினரும், அ.தி.மு.க.,வினரும் சொல்லுதாங்கல்லா... இதுல, ‘18 எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் இருக்கிறது உண்மை தான்... ஆளுங்கட்சிக்கு எதிரா நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தா, எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவா செயல்படுவாங்க’ன்னு உளவுத்துறையும் முதல்வருக்கு அறிக்கை குடுத்திருக்கு வே... “த.வெ.க., பொதுச்செயலரும், நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்திடம் பேசிய முதல்வர், ‘அவங்களை கூப்பிட்டு பேசி சரி பண்ணுங்க’ன்னு உத்தரவு போட்டிருக்காரு... பட்டியல்ல இருந்த 18 பேர்ல, நாலு பேர் அமைச்சர்களாம்... “அவங்களை தவிர, மற்ற 14 பேரையும் தன் வீட்டுக்கு ஆனந்த் கூப்பிட்டு பேசியிருக்காரு... அப்ப, 28 வருஷங்களா விஜய் ரசிகர் மன்றத்துல இருந்து எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு ஆட்சிக்கு வந்திருக்கோம்னு உருக்கமா பேசி, அவங்களை சமாதானப்படுத்தியிருக்காரு... அதோட, ‘முதல்வர் விஜய்க்கு விசுவாசமா இருப்போம்’னு 14 பேரிடமும் சத்தியம் வாங்கிட்டு அனுப்பி வச்சிருக்காரு வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி. அரட்டை முடிய அனைவரும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

D.Ambujavalli
நவ 22, 2026 19:31

அரசியல்வாதியின். சத்தியமும், காதலியிடம் 'நான். உனக்காக. உயிரையே. கொடுப்பேன் ' என்ற காதலனின். சத்தியமும். ஒன்றுதான் இவர்கள் கூடத்தான், 'லஞ்சம் தொட. விடமாட்டோம், தொட்டவனை விடமாட்டோம்'. என்று. முழங்கினார்கள் அதிகாரியை. அழைத்து. 'கமிஷன். கறாராக. வரவேண்டும் இன்னும். எந்தெந்த. வழியில். பணம். 'பண்ணலாம்'. என்று. ஆலோசனை. கேட்ட. விவரமும் வந்திருக்கிறதே


Anantharaman Srinivasan
நவ 22, 2026 18:23

அரசு அதிகாரி கலைச்செல்வன் தவெக லோக்கல் புள்ளி தியாகராஜனுக்கு எப்படியெல்லாம் "கையூட்டு வாங்கலாம்.. என்பதை விலாவாரியாக விளக்கி” தூய ஆட்சியில் ஐந்தாண்டும் வளம் கொழுக்கும் formula வை சொல்லித்தந்து விட்டார். போகப்போக 234 தொகுதிளிலும் கட்டுக்கடங்காமல் இனி லஞ்சமழை தான்.


Anantharaman Srinivasan
நவ 22, 2026 18:12

நித்திய வசூலில் கொழித்தால் தான் அரசுக்கு விஸ்வாசமாயிருப்போமென மனதளவில் நினைத்து சத்தியம் செய்திருப்பார்கள்.


Kalyanaraman Subramaniam
நவ 22, 2026 09:39

அரசு குடுக்கற சத்தியமே நிலைக்கலைனா, அரசியல்வாதிகள் குடிப்பது எப்படி நிலைக்கும்??


Lakshminarasimhan
நவ 22, 2026 07:41

ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் லஞ்ச லாவண்ய அற்ற ஆட்சியை தருவோம்னு சொல்லிட்டு இப்போ எண்ணற்ற இடங்களில் இந்த லஞ்ச மேட்டர்ல ஏகப்பட்ட அலப்பறைகள் செய்திருக்கிறார்கள் இதற்கு முட்டு கொடுக்கும் அனைவரும் பொறுப்பு ஏற்கணும்