உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மழைநீர் கால்வாயில் கழிவு நீர் கலப்பு பழையபல்லாவரத்தில் சுகாதார சீர்கேடு

மழைநீர் கால்வாயில் கழிவு நீர் கலப்பு பழையபல்லாவரத்தில் சுகாதார சீர்கேடு

பல்லாவரம்,தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலம், 21வது வார்டு, பழைய பல்லாவரம், பெருமாள் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது.இதை முறையாக பராமரிக்காததால், மேன் ஹோல்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் வழிந்தோடுகிறது. மூன்று ஆண்டுகளாக இப்பிரச்னை நீடிப்பதால், லேசான மழை பெய்தாலே, பெருமாள் நகர் உள்ளிட்ட பகுதிகள் கழிவுநீரில் மிதக்கின்றன.இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல், மேன் ஹோல்களில் இருந்து பிளாஸ்டிக் குழாய் பதித்து, அருகே செல்லும் மழைநீர் கால்வாயுடன் இணைத்துள்ளனர்.இதனால், பாதாள சாக்கடை கழிவு, பிளாஸ்டிக் குழாய் வழியாக வெளியேறி, மழைநீர் கால்வாயில் கலந்து, அருகேயுள்ள கீழ்க்கட்டளை ஏரிக்கு செல்கிறது.மாநகராட்சி நிர்வாகமே இப்படி செய்வதால், அப்பகுதியில் துர்நாற்றம், கொசு தொல்லை அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் மெல்ல மெல்ல நாசமடைந்து வருகிறது.மற்றொருபுறம், ஏரி தண்ணீரும் கெட்டுவிட்டது. இது குறித்து, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.இப்படியே போனால், மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலந்து, அப்பகுதி முழுதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய்கள் பரவும் என்பதில் மாற்றமில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு, இதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை