உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / டிவி நடிகர் வீட்டில் பாம்பு

டிவி நடிகர் வீட்டில் பாம்பு

மதுரவாயல், மதுரவாயலில், தொலைக்காட்சி தொடர் நடிகர் வீட்டில் புகுந்த நல்லப்பாம்பை, தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் காமராஜ். இவர், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். நேற்று காலை இவரது வீட்டில், நல்லப்பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து அவர், கோயம்பேடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அங்கிருந்த நல்லப்பாம்பு குட்டியை பத்திரமாக பிடித்தனர். இதையடுத்து, அந்த பாம்பு குட்டியை, வண்டலுார் பூங்காவில் உள்ள பாம்புப் பண்ணையில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி