உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு: கரூர் மாவட்டத்தில், மீண்டும் பொதுமக்களிடம் மனு வாங்கும் பணியை, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவங்கியுள்ளார். அவர், அமைச்சர் ஆன புதிதில், கரூரில் மக்களிடம் வாங்கிய கோரிக்கை மனுக்கள், மூட்டைகளாகக் கட்டி, கோதுார் குப்பைக்காட்டில் வீசப்பட்டுள்ளது; அதை அ.தி.மு.க., நிர்வாகிகள் கொண்டு வந்து விட்டனர். இதுதான் தி.மு.க., ஆட்சியின் அவலம். தி.மு.க., தலைமை ஊர் ஊரா பெட்டி வைத்து மனுக்கள் வாங்கியதை, செந்தில் பாலாஜி உள்ளூரில் தொடர்கிறார்... இதுல நடவடிக்கை எல்லாம் எதிர்பார்க்கலாமா?ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ பேட்டி: நாட்டில் மக்களுக்குத் தேவையான அடிப்படை பிரச்னைகள் அதிகம் உள்ளன. மக்கள் பிரச்னையை தீர்க்கக்கூடிய அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என, நான் நினைக்கிறேன். த.வெ.க., தலைவர் விஜய், விமான நிலையம் அமைக்க, பரந்துாரை தவிர வேறு இடத்தை, 30 அல்லது 60 நாட்களுக்குள் தேர்வு செய்து அரசுக்கு தெரிவிக்கலாம். அவ்வாறு செய்தால் நாங்கள் வரவேற்போம்.இவர், விஜய்க்கு பாடம் எடுக்கிறாரா இல்ல மற்ற அரசியல்வாதிகள் எல்லாம் மக்கள் பிரச்னையை தீர்க்கிறவங்க இல்லைன்னு குற்றம் சொல்றாரா?மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் பேட்டி: மத்திய அரசு, அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப் படுத்தக்கூடிய சட்டத்தை இயற்ற வேண்டும். விவசாய கடன்கள் முழுதையும் நாடு முழுதும் தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் இடுபொருட்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும். தொழிலாளர்களை பாதிக்கக்கூடிய தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு: காலை உணவுத்திட்டம், மகளிர் உதவித்தொகை, மகளிர் இலவச பயணம் என எண்ணற்ற திட்டங்களை பெண்களுக்காக தி.மு.க., அரசு செய்கிறது. அனைத்து திட்டங்களையும் வாங்கிக் கொண்டு, தேர்தல் நேரத்தில் ஓட்டு மட்டும் மற்ற கட்சிக்கு போட்டு விடுகிறீர்கள். அரசு மக்களுக்கு செய்த திட்டங்களை பார்த்து, எங்களுக்கு நல்ல மதிப்பெண் போட வேண்டும்விவசாயிகள் விவகாரத்துல மத்திய அரசுக்கே எல்லா கோரிக்கையையும் வைக்கிறாரே, மாநில அரசிடம் கேட்க எதுவும் இல்லையா?

இலவச பயணம் என எண்ணற்ற திட்டங்களை பெண்களுக்காக தி.மு.க., அரசு செய்கிறது. அனைத்து திட்டங்களையும் வாங்கிக் கொண்டு, தேர்தல் நேரத்தில் ஓட்டு மட்டும் மற்ற கட்சிக்கு போட்டு விடுகிறீர்கள். அரசு மக்களுக்கு செய்த திட்டங்களை பார்த்து, எங்களுக்கு நல்ல மதிப்பெண் போட வேண்டும்.

மக்கள் வரிப்பணத்துல திட்டங்களை செயல்படுத்திட்டு, 'ஓசி பஸ், அம்மாவுக்கும் ஆயிரம், மகளுக்கும் ஆயிரம்'னு அமைச்சர்கள் ஆயிரத்தெட்டு கமென்ட் அடிச்சா, எப்படி ஓட்டு விழும்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி