உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சொத்து குவித்த பெண் அதிகாரிக்கு சூப்பர் பதவி!

சொத்து குவித்த பெண் அதிகாரிக்கு சூப்பர் பதவி!

''பயணப் படியை வழங்காம இழுத்தடிக்கறாஓய்...'' என்றபடியே,பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா.''எந்த துறையில பா...''என கேட்டார், அன்வர்பாய்.''பள்ளிக்கல்வித் துறையில தான்... போனமாசம் திருச்சி, தொட்டியம்பகுதியில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவியருக்கான பாரதியார் தினக் குழு விளையாட்டுப் போட்டிகள் நடந்துது ஓய்...''இதுல, பல மாவட்டங்கள்ல இருந்தும் அரசு பள்ளி மாணவ - மாணவியர் கலந்துண்டா...வழக்கமா, போட்டி முடிஞ்சதும் பயணப் படியை தந்துடுவா ஓய்...''ஆனா, 'நீங்க ஊருக்கு போங்கோ... அப்பறமா பயணப் படியை அனுப்புறோம்'னுமாவட்ட கல்வி அதிகாரிகள் சொல்லி அனுப்பிட்டா... இதனால, தங்களது சொந்த பணத்தை செலவு பண்ணி, எல்லாரும் ஊர் திரும்பியிருக்கா ஓய்...''இந்த சூழல்ல, இந்தமாசம் மதுரை, தேனியிலவிளையாட்டுப் போட்டிகள் நடக்கும்னு அறிவிச்சிருக்கா... 'இதுக்கும்சொந்த பணத்தை செலவுபண்ணி போக முடியாது'ன்னு, அரசு பள்ளிஉடற்கல்வி ஆசிரியர்கள்புலம்பறா ஓய்...''விளையாட்டுக்கு முக்கியத்துவம் தர்ற அரசுன்னு துணை முதல்வர் அடிக்கடி பெருமையா சொல்லிக்கிறார்... ஆனா, நிஜ நிலவரம் இப்படி இருக்குஓய்...'' என்றார், குப்பண்ணா.உடனே, ''இந்திய கம்யூ., மூத்த தலைவர்நல்லகண்ணு நுாற்றாண்டுவிழா சமீபத்துல நடந்துச்சே...'' என, முன்னுரை தந்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''விழாவை நடத்த பழ.நெடுமாறன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுல, தி.மு.க.,வுல இருந்து, 'சஸ்பெண்ட்'ஆன வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணனை சேர்க்கலைங்க...''இத்தனைக்கும் ஸ்தாபன காங்கிரஸ்ல நெடுமாறனும், ராதாகிருஷ்ணனும் குரு, சிஷ்யனா இருந்திருக்காங்க... நல்லகண்ணு தேர்தல் பணிக்கு கோவில்பட்டி வந்தா, ராதாகிருஷ்ணன் வீட்டுலதான் மதியம் சாப்பிடுவாராம்...''கிராமங்கள்ல பிரசாரத்துக்கு ரெண்டு பேரும் வாடகை கார்ல பல முறை போயிருக்காங்க... அப்படிஇருந்தும், தன்னை அழைக்கலையேன்னு ராதாகிருஷ்ணன் புலம்பிட்டு இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''திருடன் கையில சாவியை குடுக்கலாமா வே...'' என திடீரென கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''ரொம்ப தப்பாச்சே...விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''சென்னையை ஒட்டியிருக்கிற, பட்டுக்குபிரசித்தி பெற்ற மாவட்டத்துல ஒரு பெண் தாசில்தார் இருக்காங்க... சில வருஷங்களா ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கி குவிச்சிட்டதா இவங்க மேல புகார்கள் இருக்கு வே...''இதனால, இவங்களைலஞ்ச ஒழிப்பு துறையினர் கண்காணிச்சிட்டு இருக்காங்க... இந்த சூழல்ல, இவங்களை மாவட்ட ஆய்வுக்குழு துணை அலுவலரா, பெண் கலெக்டர் நியமிச்சிருக்காங்க வே...''இந்த பதவியில இருக்கிறவங்க, எந்த அரசு அலுவலகத்துலயும்புகுந்து திடீர்னு ஆய்வு செய்யலாம்... லஞ்ச ஒழிப்பு துறையினருடன்சேர்ந்து ஆய்வு மற்றும் சோதனை நடத்தக்கூடிய அதிகாரம் மிக்க பதவி...''வழக்கமா இந்த பணியிடத்துக்கு,சர்ச்சையில சிக்காத அதிகாரிகளை தான்நியமிப்பாங்க... தாங்கள்கண்காணிச்சிட்டு இருக்கிறவங்களையே இந்த பதவிக்கு நியமிச்சதை பார்த்து, லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிர்ச்சியில இருக்காங்க வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, அனைவரும் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Yes your honor
ஜன 03, 2025 10:43

திருடனுக்கே அவன் தொழிலில் பிரமோஷன் கொடுக்கும் ஆட்சி தான் கழக ஆட்சி. சின்ன திருடன் பெரிய திருடன் ஆவான், பெரிய திருடன் மிகப்பெரிய திருடன் ஆவான். மிகப்பெரிய திருடன், இதற்கு விடை உங்களுக்கே தெரியும்.


Anantharaman Srinivasan
ஜன 03, 2025 23:07

யார்யார் எப்படிப்பட்ட திருடன் என்பது எல்லோருக்கும் தெரியும். அதைச்சொல்ல நீ ஏன் "முதலில்" ஓடி வருகிறாய்..?


R.RAMACHANDRAN
ஜன 03, 2025 08:31

லஞ்சம் கொடுத்தால் எந்த பதவியும் பெறலாம் இந்நாட்டில்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை